கூகுள் ஐஓ கண்காட்சியில் ஜெல்லி பீன் அறிமுகம்!

By Super
|
கூகுள் ஐஓ கண்காட்சியில் ஜெல்லி பீன் அறிமுகம்!

கூகுள் ஐஓ கண்காட்சியில் தனது புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம். ப்ரோட்டோ டைப் கிளாஸ், ஜெல்லி பீன் இயங்குதளம் என்று புதிய புதிய தொழில் நுட்ப படைப்புகளை கூகுள் கடந்த ஆண்டில் உருவாக்கி கொண்டிருந்தது. இந்த படைப்புகளை தனது ஐஓ காண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கிறது கூகுள்.

அந்த வகையில் நேற்று துவங்கிய இந்த ஐஓ கண்காட்சியில் ஆன்ட்ராய்டின் புதிய வெர்ஷனான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகம் செய்வதாக தீர்மானித்திருந்தது கூகுள்.

இந்த ஜெல்லி பீன் இயங்குதளம் முதலில் எந்த மின்னணு சாதனத்தில் வெளிவர போகிறது என்ற கேள்வியும் இருந்தது. இதற்கு நேற்று நடந்த கூகுள் ஐஓ கண்காட்சியில் பதிலும் கிடைத்திருக்கிறது.

நெக்சஸ்-7 டேப்லட்டில் இந்த ஜெல்லி பீன் இயங்குதளம் வெளியாக இருக்கிறது. ஆசஸ் நிறுவனத்தின் டேப்லட்டான நெக்சஸ்-7, ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷனில் இயங்கும். இது 7 இஞ்ச் திரை கொண்ட டேப்லட்.

இந்த திரையின் மூலம் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொண்டது. இது 1.3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் என்விஐடிஐஏ டெக்ரா-3 குவாட் கோர் பிராசஸரினை கொண்டது.

இது போன்ற இன்னும் ஆற்றல் வாய்ந்த பல தொழில் நுட்பத்தினை கூகுள் ஐஓ கண்காட்சியில் அறிமுகம் செய்யும். நேற்று துவங்கிய இந்த கண்காட்சி 29-ஆம் தேதி வரை நடை பெறும்.

மேலும் இது பற்றிய தகவல்கள் வாசகர்ளின் பார்வைக்காக, தொழில் நுட்ப செய்திகளை வழங்கும் கிஸ்பாட்டில் வெளியாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X