கடைசி கட்டத்திற்கு வந்த 4 OnePlus போன்கள்.. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அப்டேட் பாலிசி அப்படி!
டபுள்யூடபுள்யூடிசி 2025 (WWDC 2025) நிகழ்வில், ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 26 அப்டேட்டின் (Apple iOS 26 Update) அறிமுகம் ஆனது, டெக் உலகின் பட்டித்தொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் வேளையில்.. "அட இருங்க பாய்" என்று கூறும்படியாக.. கூகுள் (Google) நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டின் ஸ்டேபிள் ரிலீஸை (Android 16 Update Stable Release) இம்மாதம் (ஜூன் 2025) வெளியிட உள்ளது
வழக்கம் போல ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை முதலில் பெறும் ஸ்மார்ட்போன்களாக கூகுள் பிக்சல் மாடல்கள் இருக்கும். அதை தொடர்ந்து ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் விவோ (Vivo) போன்ற பிற ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வந்து சேரும்.

குறிப்பாக ஒன்பிளஸ் பற்றி பேசுகையில், சில ஒன்பிளஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் தான் கடைசியாக கிடைக்கவுள்ள மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட் ஆக இருக்கும். அதாவது சில ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 க்கு பிறகு அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு 17 கிடைக்காது. அதென்ன மாடல்கள்?
1. ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R)
2. ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3)
3. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4)
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite)
5. ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad)
ஒன்பிளஸ் நிறுவனம், அதன் எந்தந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 16 க்கு மேம்படுத்தப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை என்பதையும், மேலே உள்ள பட்டியல் ஆனது ஏற்கனவே உள்ள ஒன்பிளஸ் நிறுவனத்தின் அப்டேட் பாலிசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் அப்டேட் பாலிசி: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஹை எண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு 4 தலைமுறை ஆண்ட்ராய்டு அப்டேட்களை உறுதியளிக்கும் ஒரு நல்ல சாஃப்ட்வேர் அப்டேட் பாலிசியை கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் முன்னதாக இது மூன்றாக மட்டுமே இருந்தது; பின்னர் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மாடலில் தொடங்கி இது 4 ஆக நீட்டிக்கப்பட்டது.
இதேபோல முன்னதாக ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் 2 அப்டேட்களை மட்டுமே பெற்று வந்தது. பின்னர் ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் வெளியீட்டுடன் இது மூன்றாக அதிகரித்தது. ஆச்சரியப்படும் விதமாக, ஜூலை 2024 இல் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது நான்கு ஆண்டுகளுக்கான ஓஎஸ் அப்டேட்டை உறுதியளிக்கிறது.
இருப்பினும் சற்றே மலிவான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் என் மாடல்கள் ஆனது 2 ஆண்ட்ராய்டு அப்டேட்களை மட்டுமே வழங்குகின்றன. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது 4 ஓஎஸ் அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சாஃப்ட்வேர் அப்டேட் பாலிசியை நல்ல முறையில் மேம்படுத்தியிருந்தாலும்.. 7 ஆண்டுகள் வரை ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும் என்கிற வாக்குறுதிகளுடன் வரும் சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் பிக்சல் (Google Pixel) ஸ்மார்ட்போன்களும் இங்கே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள், ஒன்பிளஸ் மற்றும் விவோவை தொடர்ந்து ஷாவ்மீ மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் கிடைக்கும். அப்படியாக எந்தெந்த முக்கியமான ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிட்ட அப்டேட் கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ:
- ஷியோமி 15
- ஷியோமி 15 ப்ரோ
- ஷியோமி 15 அல்ட்ரா
- ஷியோமி 15எஸ் ப்ரோ
- ஷியோமி 14
- ஷியோமி 14 ப்ரோ
- ஷியோமி 14 அல்ட்ரா
- ஷியோமி 14டி
- ஷியோமி 14டி ப்ரோ
- ஷியோமி 14 சிவி
- ஷியோமி 13
- ஷியோமி 13 ப்ரோ
- ஷியோமி 13 அல்ட்ரா
- போக்கோ எஃப்7
- போக்கோ எஃப்7 ப்ரோ
- போக்கோ எஃப்7 அல்ட்ரா
- போக்கோ எஃப்6
- போக்கோ எஃப்6 ப்ரோ
- போக்கோ எக்ஸ்7
- போக்கோ எக்ஸ்7 ப்ரோ
- போக்கோ எக்ஸ்6
- போக்கோ எக்ஸ்6 ப்ரோ
- போக்கோ எம்7
- போக்கோ எம்7 ப்ரோ
- போக்கோ எம்6 (எல்டிஇ / 5ஜி)
- போக்கோ எம்6 பிளஸ்
- போக்கோ எம்6 ப்ரோ (எல்டிஇ / 5ஜி)
- போக்கோ சி75
- போக்கோ சி71


Click it and Unblock the Notifications








