Home
News

கடைசி கட்டத்தில் உள்ள 9 மோட்டோரோலா போன்கள்.. அடுத்த வருஷம் வேற போன் வாங்க தயார் ஆகிக்கோங்க!

கூகுள் (Google) நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் (Android 16 Update) ஆனது வழக்கத்திற்கு மாறாக.. பல மாதங்களுக்கு முன்பே வெளிவந்துள்ளது. இது ஏற்கனவே கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது. மேலும் மோட்டோரோலா உள்ளிட்ட பிற பிராண்டுகளும் தத்தம் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 16 பீட்டாவை (Motorola Android 16 Beta) முயற்சிக்க அதன் பயனர்களை அழைக்க தொடங்கியுள்ளது. விரைவில் இந்நிறுவனம் ஸ்டேபிள் பில்ட்-ஐ ரிலீஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.

கடைசி கட்டத்தில் உள்ள 9 மோட்டோரோலா போன்கள்.. அடுத்த வருஷம்?

அது என்னவென்றால் - ஆண்ட்ராய்டு 16 அப்டேட் உடன் பல மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் அதன் ஆண்ட்ராய்டு அப்டேட் ரோட்மேப்பின் முடிவை எட்டும். அதாவது ஆண்ட்ராய்டு 16 க்கு பின்னர் குறிப்பிட்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு எந்த மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்டும் கிடைக்காது. ஆண்ட்ராய்டு 16 க்கு பின்னர் அந்த ஸ்மார்ட்போன்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்ட்ராய்டின் அதே வெர்ஷனில் தான் இயங்கும். அத்தகைய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

1. மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ (Motorola Edge 40 Pro)
2. மோட்டோரோலா எட்ஜ் 2024 (Motorola Edge 2024)
3. மோட்டோரோலா திங்க்ஃபோன் (Motorola ThinkPhone)

4. மோட்டோரோலா ரேசர் 2023 / ரேசர் 40 (Motorola Razr 2023 / Razr 40)
5. மோட்டோரோலா ரேசர்+ 2023 / ரேசர் 40 அல்ட்ரா (Motorola Razr+ 2023 / Razr 40 Ultra)
6. மோட்டோரோலா மோட்டோ பேட் 60 ப்ரோ (Motorola Moto Pad 60 Pro)

7. மோட்டோரோலா மோட்டோ ஜி85 (Motorola Moto G85)
8. மோட்டோரோலா மோட்டோ ஜி55 (Motorola Moto G55)
9. மோட்டோரோலா மோட்டோ ஜி35 (Motorola Moto G35)

மேற்கண்ட பட்டியல் ஆனது மோட்டோரோலாவின் சாஃப்ட்வேர் அப்டேட் கொள்கையை அடிப்படையாக கொண்டது. இந்த 9 ஸ்மார்ட்போன்களில் உங்களுடைய ஸ்மார்ட்போனும் இருந்தால், ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டிற்கு பின்னர் கிடைக்கும் சமீபத்திய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை தொடர்ந்து பெற, அடுத்த ஆண்டு வாக்கில் எப்போதாவது நீங்கள் புதிய ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேட் ஆக வேண்டியிருக்கும்.

மோட்டோரோலா நிறுவனம் எப்போது ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை ரிலீஸ் செய்ய தொடங்கும்? சாஃப்ட்வேர் ரிலீஸை பொறுத்தவரை மோட்டோரோலா நிறுவனம் அதன் சகாக்களை விட சற்று மெதுவாக உள்ளது. கடந்த ஆண்டு வந்த ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டை, பல ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடுவதில் இந்த பிராண்ட் இன்னும் மும்முரமாக வேலை செய்து வருகிறது

அதற்கான அடுத்த அப்டேட் வெகு தொலைவில் உள்ளது என்று அர்த்தமல்ல. உண்மையில், மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு 16 பீட்டாவை முயற்சிக்க பங்கேற்பாளர்களை அழைக்க தொடங்கியுள்ளது. ஆனால் இதில் குறைவான எண்ணிக்கையிலான பயனர்களே பங்குகொள்ள முடிகிறது; மேலும் இது குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட டிவைஸ்களுக்கு மட்டுமே கிடைக்கிறது

மற்ற நிறுவனங்களை போல மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு முழு அளவிலான பப்ளிக் பீட்டா டெஸ்ட்-ஐ செய்வதில்லை. இப்போதைக்கு மோட்டோரோலா நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டின் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. மேலும் மோட்டோரோலா இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதும் இல்லை. ஏதாவது ஒரு ஸ்மார்ட்போனுக்கு அப்டேட் கிடைத்தால் மட்டுமே அதுகுறித்த தகவலை அறிந்துகொள்வோம்.

இருப்பினும், முந்தைய வெளியீடுகளின் அடிப்படையில், மோட்டோரோலா நிறுவனம் ஆனது அதன் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை வருகிற 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் ரிலீஸ் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Android 16 Will Be Last Major Update For These 9 Motorola Smartphones Check If Your Phone Is There
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X