Home
News

அப்படி போடு.. Motorola பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஆண்ட்ராய்டு 16 அப்டேட்.. எந்தெந்த போன்களுக்கு தெரியுமா?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு 16 (Android 16) அப்டேட் பெறும் மோட்டோரோலா போன்களின் பட்டியல் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது மோட்டோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் எந்த தேதியில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை இன்னும் மோட்டோரோலா நிறுவனம் வெளியிடவில்லை. ஆனாலும் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மோட்டோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் எந்தெந்த மோட்டோரோலா போன்கள் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இப்போது ஆண்ட்ராய்டு 16 அப்டேட் பெறப்போகும் மோட்டோரோலா போன்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

அப்படி போடு.. Motorola பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஆண்ட்ராய்டு 16 அப்

மோட்டோரோலா ரேஸர் போன்கள்:

மோட்டோரோலா ரேஸர் 2025 (Motorola Razr 2025)
மோட்டோரோலா ரேஸர்+ 2025 (Motorola Razr+ 2025)
மோட்டோரோலா ரேஸர் அல்ட்ரா 2025 (Motorola Razr Ultra 2025)
மோட்டோரோலா ரேஸர்+ 2024 (Motorola Razr+ 2024)
மோட்டோரோலா ரேஸர் 60 (Motorola Razr 60)
மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra)
மோட்டோரோலா ரேஸர் 50 (Motorola Razr 50)
மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra)

மோட்டோரோலா எட்ஜ் போன்கள்:

மோட்டோரோலா எட்ஜ் 2025 (Motorola Edge 2025)
மோட்டோரோலா எட்ஜ் 60 (Motorola Edge 60)
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro)
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion)
மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus)
மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50)
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro)
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra)
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion)
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo)
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ (Motorola Edge 40 Pro)

மோட்டோரோலா மோட்டோ ஜி போன்கள்:

மோட்டோ ஜி 2025 (Moto G 2025)
மோட்டோ ஜி பவர் 2025 (Moto G Power 2025)
மோட்டோரோலா ஜி ஸ்டைலஸ் 2025 (Motorola G Stylus 2025)
மோட்டோ ஜி86 (Moto G86)
மோட்டோ ஜி86 பவர் (Moto G86 Power)
மோட்டோ ஜி85 (Moto G85)
மோட்டோ ஜி75 (Moto G75)
மோட்டோ ஜி56 (Moto G56)
மோட்டோ ஜி55 (Moto G55)
மோட்டோரோலாவின் திங்க்ஃபோன் 25 (ThinkPhone 25 by Motorola)

ஆண்ட்ராய்டு 16 அம்சங்கள்: 3 எக்ஸ்பிரசிவ் டிசைன் (3 Expressive design), டெஸ்க்டாப் மோட் (desktop mode), குவிக் செட்டிங்ஸ் பேனல் (Quick Settings panel), லைவ் அப்டேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஆண்ட்ராய்டு 16 அப்டேட் மூலம் கிடைக்கும். இதுதவிர பல மேம்பட்ட அம்சங்கள் இந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி போடு.. Motorola பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஆண்ட்ராய்டு 16 அப்

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் இந்தியாவில் மோட்டோ ஜி96 5ஜி (Moto G96 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் கூட தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் இந்த போன் வெளிவரும்.

மேலும் 6.67-இன்ச் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 50எம்பி சோனி LYTIA 700சி மெயின் சென்சார், 32எம்பி செல்பி கேமரா, IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 5500mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த மோட்டோ ஜி96 5ஜி போனில் உள்ளன. மேலும் ரூ.22,990 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Android 16 update: Eligible Motorola devices: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X