Home
News

எதிர்பார்த்ததைவிட சீக்கிரம்.. 4ஆவது பீட்டா வெர்ஷனே வந்தாச்சு.. Android 16 ஓஎஸ் எப்போது? எந்தெந்த மாடல்களில்?

ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு பிரியர்களும் குஷியாகும்படி ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பீட்டா (Android 16 OS Beta) களமிறங்கி இருக்கிறது. ஏற்கனவே, 3 பீட்டா வெர்ஷன் வெளியாகியது. இப்போது. 4ஆவது பீட்டா வெர்ஷனும் வெளியாகி இருப்பதால், அதன் வெளியீடு எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக இருக்கும் என்று ஸ்மார்ட்போன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்போது வெளியாக வாய்ப்புள்ளது? எந்தெந்த மாடல்களில் பீட்டா வெர்ஷன் கிடைக்கிறது? முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் இப்போது பழசாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், மேஜர் ஸ்மார்ட்போன் பிராண்ட்களின் மாடல்களில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பீட்டா வெர்ஷன்கள் கிடைக்க தொடங்கிவிட்டது. அதிலும், 4ஆவது பீட்டா வெர்ஷனே களமிறங்கிவிட்டது. முதலாவது பீட்டா வெர்ஷன் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகியது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வெர்ஷன்கள் வந்தன.

எதிர்பார்த்ததைவிட சீக்கிரம்.. 4ஆவது பீட்டா வெர்ஷனே வந்தாச்சு!

பிப்ரவரி 13ஆம் தேதி பீட்டா வெர்ஷன் 2 வெளியாகியது. மார்ச் 13ஆம் தேதி பீட்டா வெர்ஷன் 3 வெளியாகியது. இப்போது, ஏப்ரல் 17ஆம் தேதி பீட்டா வெர்ஷன் 4 வெளியாகிவிட்டது. பொதுவாக புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் வெளியாகும்போது, அதற்கு முன்பாக அதிகபட்சம் 4 பீட்டா வெர்ஷன்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது.

ஆகவே, மாதத்துக்கு ஒரு பீட்டா வெர்ஷன் களமிறங்கி இருப்பதால், அடுத்த மாதம் ஸ்டேபிள் வெர்ஷன் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், வரும் மே 20ஆம் தேதி கூகுள் ஐ/ஓ 2025 (Google I/O 2025) இவெண்ட் நடக்க இருக்கிறது. இந்த இவெண்ட்டில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 2025ஆம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வெளியாகும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தேதியை குறிப்பிடவில்லை. ஆகவே, ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 4ஆவது பீட்டா வெர்ஷன் முன்னதாகவே வெளியாகிவிட்டதால், மே மாதத்திலேயே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எந்தெந்த மாடல்களில் பீட்டா வெர்ஷன் கிடைக்கிறது? சியோமி 15, சியோமி 14டி ப்ரோ, ஒன்பிளஸ் 13, விவோ எக்ஸ்200 ப்ரோ, ஐக்யூ 13, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8, ஹானர் மேஜிக் 7 ப்ரோ, ரியல்மி ஜிடி7 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது. மேலும், லெனோவா யோகா டேப் பிளஸ் (Lenovo Yoga Tab Plus) டேப்லெட்டிலும் பீச்சா வெர்ஷன் 4 கிடைக்கிறது.

சாம்சங் மாடல்களில் இன்னும் பீட்டா வெர்ஷன் வரவில்லை. ஏனென்றால், அந்த நிறுவனம் ஒன் யுஐ 7 (One UI 7) வெர்ஷனில் முழு கவனம் செலுத்தி வருகிறது. ஓரிரு வாரங்களில் பீட்டா வெர்ஷன் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இப்போது, எந்தெந்த கூகுள் பிக்சல் (Google Pixel) மாடல்களில் பீட்டா வெர்ஷன் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 6, கூகுள் பிக்சல் 6 ப்ரோ, கூகுள் பிக்சல் 6ஏ, கூகுள் பிக்சல் 7, கூகுள் பிக்சல் ப்ரோ, கூகுள் பிக்சல் 7ஏ, கூகுள் பிக்சல் 8, கூகுள் பிக்சல் 8 ப்ரோ, கூகுள் பிக்சல் 8ஏ, கூகுள் பிக்சல் 9, கூகுள் பிக்சல் 9 ப்ரோ, கூகுள் பிக்சல் 9ஏ ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. மேலும், கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல், கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்டு ஆகிய மாடல்களிலும் கிடைக்கிறது.

ஆகவே, கிட்டத்தட்ட பெரும்பாலான மாடல்களில் பீட்டா வெர்ஷன் வந்துவிட்டது. இதனால், எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வெர்ஷன் கிடைக்க வாய்ப்புள்ளது தெரியவருகிறது. ஹெல்த் கனெக்ட், அட்வான்ஸ்டு வீடியோ, ரிச்சர் ஹாப்டிக்ஸ், ரெஃப்ரெஷ் ரேட், நோட்டிபிகேஷன் போன்ற பலவற்றில் இந்த ஓஎஸ் அப்கிரேட் செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Android 16 Roll Out Is Sooner Than Expected More Major Brands Now Offering Beta Version
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X