துள்ளிக் குதிக்கும் OnePlus பயனர்கள்.. சைலன்டாக கிடைத்தது புதிய அப்டேட்.. எந்தெந்த மாடலுக்கு தெரியுமா?
சமீபத்தில் இந்தியாவில் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 அப்டேட் கிடைத்தது. இந்நிலையில் மேலும் சில ஒன்பிளஸ் போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் 10டி மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் போன்களும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Android 14-based Oxygen OS 14) அப்டேட் பெறத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இந்த ஆண்ட்ராய்டு 14 அப்டேட் பெற்றவர்கள் இது குறித்த ஸ்கிரீன் ஷாட்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். எனவே இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T) மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) பயனர்கள் செட்டிங்ஸ் பக்கத்திற்குச் சென்று இது குறித்து விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 அப்டேட் ஆனது ஒன்பிளஸ் 10டி மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் போன்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. பின்பு இந்த போன்களின் பாதுகாப்பை மேம்படுத்த நவம்பர் 2023 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.
அதேபோல் இந்த புதிய அப்டேட் போன்களின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கிறது. மேலும் ஹோம் ஸ்கிரீன் வால்பேப்பர் பிரச்சனைகளைச் சரி செய்யும் இந்த புதிய அப்டேட். இதுதவிர ஸ்கிரீன் ஃப்ளிக்கர் சிக்கலைச் சரிசெய்கிறது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 அப்டேட். குறிப்பாக புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் ஒன்பிளஸ் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
இப்போது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம். 6.74-இன்ச் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன். மேலும் 2772×1240 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த போனில் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கும் சாரஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கிடைப்பதால் இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








