Home
News

புகுந்து விளையாடலாம்: கூகுள் அறிவித்த ஆண்ட்ராய்டு 13- நோட்டிஃபிகேஷன், பிரைவேசி ஷார்ட்கட் என பல மேம்பாடு!

கூகுள் தனது வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டை மே11 மற்றும் மே12 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐஓ நிகழ்வானது பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என கூகுள் தெரிவித்திருக்கிறது.

வருடாந்திர டெவலப்பர் மாநாடு

வருடாந்திர டெவலப்பர் மாநாடு

கூகுளின் பெரிய வருடாந்திர டெவலப்பர் மாநாடு மே 11 மற்றும் மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார். கடந்த முறை போன்றே இந்த ஆண்டும் கூகுள் ஐஓ முற்றிலும் ஆன்லைனில் இருக்கும் எனவும் மாநாட்டின் சில பகுதிகள் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் மாநாட்டில் பல அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் தொற்றுநோயின் தாக்கம் குறைந்த அளவிலேயே இருந்தாலும் கூகுள் இந்த மாநாட்டை ஆன்லைன் மூலமாகவே நடத்த இருக்கிறது. மாநாட்டின் சில பகுதிகள் ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் நடைபெறும் என்பதால் கூகுள் குறிப்பிட்ட விஷயங்களை நேரலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதி முற்றிலும் இலவசமாக இருக்கும்

அனுமதி முற்றிலும் இலவசமாக இருக்கும்

கூகுள் தனது வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டை மே11 மற்றும் மே12 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐஓ நிகழ்வானது பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என கூகுள் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு நிகழ்வு வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு நேரலை ஒளிபரப்பப்படும். இந்த பார்வையாளர்கள் அனுமதி முற்றிலும் இலவசமாக இருக்கும் எனவும் கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த வரவேற்பு திறந்திருக்கும் எனவும் கூகுள் செய்தித் தொடர்பாளர் தி வெர்ஜிடம் குறிப்பிட்டார். கூகுள் ஐஓ 2022 பதிவுகள் இலவசமாக இருக்கும், இந்த மாநாட்டில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கூகுள் விரைவில் இதற்கான பதிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் ஐஓ 2022 எதிர்பார்க்கப்படும் அம்சம்

கூகுள் ஐஓ 2022 எதிர்பார்க்கப்படும் அம்சம்

ஆண்ட்ராய்டு 13 இன் முதல் டெவலப்பர் முன்னோட்டத்தை கூகுள் கடந்த மாதம் அறிவித்தது. அப்போது வரவிருக்கும் ஆண்ட்ராய்டு 13 இன் முக்கிய அம்சங்களை கூகுள் வெளியிடவில்லை. வரவிருக்கும் ஐஓ நிகழ்வில், கூகுள் ஆண்ட்ராய்டுக்கான புதிய விஷயங்களையும் ஆண்ட்ராய்டு 12 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை மேற்கோள் காட்டி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள புதிய மீடியா பிளேயர் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூகுள் ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் பிரிவு

கூகுள் ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் பிரிவு

கூகுள் ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் பிரிவை அறிவித்துள்ளது. அதாவது கூகுள் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ்-ன் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் ஏணைய புது அம்சங்கள் இடம்பெற்றது. ஆண்ட்ராய்டில் உள்ள அம்சம் டு நாட் டிஸ்டர்ப் மோட் ஆனது பிரையாரிட்டி மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நோட்டிபிகேஷன் அம்சமானது எந்தெந்த செயலியில் இருந்து நோட்டிபிகேஷன் பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவும். அதேபோல் இதில் புதிய பிரைவேசி செட்டிங் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன்மூலமாக கேமரா,மைக்ரோபோன், இருப்பிடம் உள்ளிட்ட பிரைவசிகளை எளிதாக கையாள முடியும். ஆண்ட்ராய்ட் 13 அம்சத்தின் அவுட்புட் பிக்கர் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

பிக்சல் 4 மற்றும் பிற பிக்சல் சாதனங்கள்

பிக்சல் 4 மற்றும் பிற பிக்சல் சாதனங்கள்

ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் அப்டேட் பிக்சல் 4 மற்றும் பிற பிக்சல் சாதனங்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 அம்சத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த டச் இண்டிகேட்டர் அம்சமானது ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில் மீண்டும் கொடுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்துகொண்டிருக்கும் போதே தொடுமாதிரியை இயக்க முடியும். ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ல் இருக்கும் அதே ஸ்க்ரீன் ஸ்பிலிட் அம்சம் ஆண்ட்ராய்டு 13-க்கும் தரப்பட்டிருக்கிறது. கூகுள் தற்போது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ன் முன்னோட்டத்தை மட்டுமே அறிவித்துள்ளது. இந்த ஆண்ட்ராய்ட் 13 முன்னோட்டமானது பிக்சல் 4 மற்றும் பிற பிக்சல் சாதனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

File Images

More from GizBot

Best Mobiles in India

English summary
Android 13 Released by Google For Pixel Smartphones: Privacy Shortcut, New Media player and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X