அலெர்ட் ஆகிக்கோங்க.. ஆண்ட்ராய்டு 12 - 15 பயனர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை.. உடனே இதை செய்ய Google அறிவுரை..
கூகுள் (Google) நிறுவனம் உலகளவில் உள்ள மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு (Android users) புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 (Android 12) முதல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தில் இயங்கும் (Android 15 OS device) சாதனங்கள் மோசமான பாதுகாப்பு சிக்கலை (Critical security alert) எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக டெக் ஜெயிண்ட் நிறுவனமான கூகுள் (GOOGLE) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பாதுகாப்பு சிக்கலில் இருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே.
சைபர் தாக்குதலுக்கு (cyber attack) ஆளாக கூடும் ஒரு மோசமான பாதிப்பு சமீபத்திய ஜனவரி 6, 2025 இல் வெளியிடப்பட்ட செக்யூரிட்டி அப்டேட்டில் (recent security update) காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான சிக்கலை உடனே சரி செய்யாவிட்டால், பயனர்களின் சாதனம் ஹேக்கர்களின் தாக்குதலுக்கு (hackers attack) சமரசமாக இயங்க வாய்ப்புள்ளதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது (Google issued warning). இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வெளியிடப்பட்டுள்ளது.

அலெர்ட் ஆகிக்கோங்க.. ஆண்ட்ராய்டு 12 - 15 பயனர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை:
ஜனவரி 6, 2025 அன்று வெளியிடப்பட்ட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டில் (security patch update), 5 கடுமையான ஆண்ட்ராய்டு சிஸ்டம் குறைபாடுகள் (5 severe flaws in the Android system) அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில்,
- CVE-2024-43096
- CVE-2024-43770
- CVE-2024-43771
- CVE-2024-49747
- CVE-2024-49748
போன்ற பாதுகாப்பு சிக்கல் தொடர்பான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
என்ன மாதிரியான மோசமான சிக்கலை ஆண்ட்ராய்டு பயனர்கள் சந்திக்க நேரிடும்?
இந்த சிக்கலை பயனர்கள் உடனே சரி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? என்பதை இப்போது பார்க்கலாம். மேற்குறிய பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்ளும் சாதனங்கள் ரிமோட் ஆக்ஸஸ் பாதிப்பிற்கு (Remote access risk) ஆளாக கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பயனர் அனுமதி தேவையில்லாமல் சாதனங்களைக் கட்டுப்படுத்த ஹேக்கர்கள் இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதனால் Google எச்சரித்துள்ளது.
அடுத்தபடியாக, டேட்டா பிரீச் சிக்கலை (Data breach risk) சந்திக்க வாய்ப்புள்ளது. அதாவது, உங்கள் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களை (personal data's at risk) ஹேக்கர்கள் திருடுவதற்காக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இறுதியாக, எந்த விதத்தில் வேண்டுமானாலும் உங்கள் சத்தானத்தின் பாதுகாப்பு தாக்கப்பட்டவாய்ப்பிருப்பதாக (security alert risk) கூகுள் எச்சரித்துள்ளது.
இதை சரி செய்ய GOOGLE நிறுவனம் வழங்கிய அறிவுரை என்ன? உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த சிக்கலை சரி செய்ய ஆண்ட்ராய்டு பயனர்கள் (Android users) என்ன செய்ய வேண்டும்? கூகுள் நிறுவனத்தின் அறிவுறுத்தல் படி, உங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களை (android device) பத்திரமாகவும் பாதுகாப்பாவும் வைத்துக்கொள்ள, நீங்கள் ஜனவரி 5, 2025 ஆம் தேதிக்கு பிறகு வெளியான செக்யூரிட்டி பேச் அப்டேட்டை (Security patch update) உடனே இன்ஸ்டால் செய்து, உங்கள் சாதனத்தை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் (update immediately to avoid security breach) என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போன் (android smartphone) அல்லது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயக்கும் டிவைஸ்களில் (android based devices) ஆட்டோமேட்டிக் அப்டேட் அம்சத்தை ஆக்டிவ் (activate automatic update feature) நிலையில் வைத்திருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய செக்யூரிட்டி பேச் அல்லது முக்கியமான அப்டேட்கால் வெளியிடப்பட்டால், உங்கள் சாதனம் தானாக அந்த அப்டேட் உடன் சாதனத்தை அப்டேட் (software update for device) செய்துகொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸ் பாதுகாப்பாக இருக்க இது மிகவும் முக்கியம் மக்களே:
மறுபுறம், எப்போதும் பயனர்கள் தேவையில்லாத லிங்க் அல்லது சந்தேகத்திற்குரிய அடையாளங்களுடன் காணப்படும் லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம் (don't clik on suspicious and unknown links) என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், எப்போதும் கவனமாக இணையத்தில் உள்ள லிங்க்-களை கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, உங்கள் சாதனம் சரியான அப்டேட் உடன் இயங்குகிறதா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








