சொல்லவே இல்ல- ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டில் இதெல்லாம் இருக்குமா?: எப்படி பதிவிறக்கம் செய்வது?

|

ஆண்ட்ராய்டு அப்டேட் எப்போது வரும் என்பது பலரின் பேசு பொருளாகவே இருந்தது. காரணம் சமீபத்திய ஓஎஸ் அப்டேட்டில் புதுவித அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க பயனர்கள காத்திருந்தனர். கூகுள் சமீபத்தில் ஆண்ட்ராய்டு 12 பீட்டா பதிப்பை பொது பதிவிறக்கத்திற்காக வெளியிட்டது. இதில் இருந்த பல பிழைகள் மற்றும் பிற குறைபாடுகளை சரி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தற்போதே ஆண்ட்ராய்டு 12 பீட்டா பதிப்பை சில எளிய முறைகள் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 12 பீட்டா டவுன்லோட்

ஆண்ட்ராய்டு 12 பீட்டா டவுன்லோட்

தங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 பீட்டா டவுன்லோட் செய்வதற்கு முன்னதாக தங்களது சாதனம் அதற்கு தயாரானதா என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம். ஆண்ட்ராய்டு 12 பீட்டா பதிப்பை பெறுவது என்பது மாடலுக்கு மாடல் மாறுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 பீட்டா பெறுவதற்கான வழிமுறைகள்

ஆண்ட்ராய்டு 12 பீட்டா பெறுவதற்கான வழிமுறைகள்

ஸ்டெப் 1: முதலில், ஆண்ட்ராய்டு 12 பீட்டா வலைதளத்தை ஓபன் செய்து உங்கள் ஸ்மார்ட்போன் பீட்டா பதிப்புக்கு தகுதியானதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2: தங்களது சாதனம் தகுதியாக இருக்கும் பட்சத்தில், ஆண்ட்ராய்டு 12 பீட்டாவை பதிவிறக்கம் செய்து நிறுவ தங்கள் ஒப்புதல் தேவைப்படும். அதற்கு நீங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 3: ஓஎஸ் நிறுவலுக்குத் தயாரானதும், அது குறித்த அறிவிப்பு தங்களுக்கு கிடைக்கும். சில சமயங்களில் இந்த அறிவிப்பு பெறுவதற்கு 24 மணிநேரங்கள் வரையிலும் ஆகலாம்.

ஸ்டெப் 4: தற்போது செட்டிங்ஸ் ஆப் பயன்பாட்டுக்குள் சென்று சிஸ்டம் என்ற தேர்வுக்குள் சென்று சிஸ்டம் அப்டேட் என்பதை கிளிக் செய்து அப்டேட்டை சரிபார்க்க வேண்டும்.

கூகுள் பிக்சல் சாதனத்தில் ஆண்ட்ராய்டு 12 பீட்டா:

கூகுள் பிக்சல் சாதனத்தில் ஆண்ட்ராய்டு 12 பீட்டா:

கூகுள் பிராண்டட் பிக்சல் சாதனம் பொதுவாகவே சமீபத்திய ஆண்ட்ராய்டு புதுப்பிப்பை பெறுகின்றன. தாங்கள் பிக்சல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவராக இருந்தால் ஆண்ட்ராய்டு 12 பீட்டா வெர்ஷனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

வழிமுறைகள்

ஸ்டெப் 1: முதலில் ஆண்ட்ராய்டு 12 பீட்டா வலைதளத்திற்கு செல்லவும் அதில் பிக்சல் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 2: தற்போது கூகுள் ஐடியுடன் உள்நுழைய வேண்டும்.

ஸ்டெப் 3: ஆதரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம். தங்கள் சாதனத்தை தற்போது தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 4: இதில் பதிவு செய் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும், இது தங்கள் தொலைபேசியில் புதுப்பிப்பு அறிவிப்பை அனுப்பும்.

ஸ்டெப் 5: தற்போது பதிவிறக்கம் மற்றும் நிறுவு என்ற பட்டனை தேர்ந்தெடுக்க வேண்டும். இது தாமாகவே சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பை பெற்று புதுப்பிக்கும்.

ஆண்ட்ராய்டு 12 பீட்டாவில் எதை எதிர்பார்க்கலாம்?

ஆண்ட்ராய்டு 12 பீட்டாவில் எதை எதிர்பார்க்கலாம்?

சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் தனியுரிமை மைய அம்சங்களுக்கு பெரும் பாதுகாப்புடனான புதிய அம்சங்களை கொண்டு வருகிறது. மேலும் முகக் கட்டுப்பாடுகள் போன்ற அம்சங்களை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் கூகுள் அணுகல் தொகுப்பு பயன்பாட்டையும் மேம்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் தங்கள் சாதனத்தில் அதிக மறுமொழி விகிதம் மற்றும் உகந்த பேட்டரி பயன்பாட்டை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீட்டா புதுப்பிப்பு

பீட்டா புதுப்பிப்பு

சிபியூ கோர் சிஸ்டம் நுகர்வு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தொடுதல்கள் அனைத்தும் புதிய ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டின் புதிய பகுதியாகும். பீட்டா புதுப்பிப்பு தொடர்ந்து வெளிவருவதன் காரணமாக நிலையான ஆண்ட்ராய்டு 12 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Android 12 Beta Version: How to Download and Update on your Smartphone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X