Home
News

தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் ஆண்ட்ராய்டு 12.!

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர தொழில்நுட்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். Google I/O தொழில்நுட்ப நிகழ்வில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பற்றிய முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தனித்துவமான அம்சங்கள் இந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் ஆண்ட்ராய்டு 12.!

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெற்ற ஸ்மார்ட்போன் மூலம் பி.எம்.டபிள்யூ காரை கூட லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாகஸ்மார்ட்போன்களில் உள்ள ஆப் பயன்பாடுகளின் நிறம், வடிவமைப்பு போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது இந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட்.

one ui, oxygen os இயங்குதளங்களில் உள்ள அம்சங்களை விட ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் லாக் ஸ்க்ரீன் நோட்டிபிகேஷனில் கூட மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் மிகப்பெரிய லாக் ஸ்க்ரீன் கடிகாரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் ஆண்ட்ராய்டு 12.!

இந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் நீங்கள் நோட்டிபிகேஷனை கவனிக்க தவறினால், அது கடிகாரம் அருகில் தனித்துவமான முறையில் காண்பிக்கப்படும். மேலும் ஐகான்கள் முன்பை விட பெரிதாக இருக்கிறது. தேதி மற்றும் கடிகாரம் உள்ளிட்டவை டிஸ்ப்ளேவின் முன்புறத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

குறிப்பாக ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் புதிதாக பிரைவசி இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் கூகுள் கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் ஆண்ட்ராய்டு 12.!

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் animation effects-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூன்று வகைகளில் பயன்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா வெர்ஷன் மட்டுமே வெளிவந்துள்ளது, இது முழுமையாக அறிமுகம் செய்யப்படும்போது நீங்கள் எதிர்பார்த்த பல்வேறு அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் ஆண்ட்ராய்டு 12.!

அண்மையில் கூகுள் பே செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி வழங்கப்பட்டது.இந்த வசதி கண்டிப்பாக அனைவருக்கும்பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதாவது சர்வதேச பண பரிமாற்ற வசதி என்னெவென்றால், அமெரிக்காவில் இருந்து
இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் கூகுள் பே செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி மிக எளிமையான வழிமுறையாக வழங்கப்பட்டு இருக்கிறது.

இதற்குமுன்பு ஸ்கேன் பேமெண்ட், யூபிஐ பேமெண்ட், பில் பேமெண்ட் என என உள்நாட்டு பேமெண்ட சேவைகளை மட்டும் வழங்கி வந்தது கூகுள் பே செயலி. தற்போது வர்த்தகத்தையும், சேவைகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றுதான் வெளிநாட்டு பேமெண்ட் சேவைக்குள் நுழைந்துள்ளது கூகுள் பே. எனவே கூகுள் பே செயலியை பயன்படுத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் பயனர்கள் இனிமேல் அமெரிக்காவில் எவ்விதமான தடையுமின்றிப் பணத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் ஆண்ட்ராய்டு 12.!

சர்வதேச பண பரிமாற்ற சேவைக்காக கூகுள் பே, இப்பிரிவில் முன்னோடியா இருக்கும் Western Union மற்றும் WISE ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. எனவே அமெரிக்காவில் இருக்கும் நபர் பணத்தை அனுப்பும் போது Western Union மற்றும் WISE இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Android 12 beta released with unique features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X