மோட்டோரோலா பயனர்கள் கவனத்திற்கு: இந்த 22 போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.! இதோ பட்டியல்.!

|

மோட்டோரோலா நிறுவனம் அண்மையில் தனது அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அப்டேட் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் 22 வெவ்வேறு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களையும் மற்றும் 1 லெனோவா ஸ்மார்ட்போனையும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-க்கு அப்டேட் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த அப்டேட் பயனுள்ள வகையில் இருக்கும்.

 வெளிவந்த தகவலின்படி,

ஆனால் இப்போது வெளிவந்த தகவலின்படி, எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அப்டேட் வரும் என்கிற பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது, சரியாக எப்போது வரும் என்கிற டைம்லைன் வெளியாகவில்லை.

விரைவில் புதிய ஓஎஸ்

எனவே பட்டியலில் உள்ள மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் ஆனது விரைவில் புதிய ஓஎஸ் அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு எந்தெந்த மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைக்கும் என்கிற
பட்டியலைப் இப்போது பார்ப்போம்.

பட்டியல்

மோட்டோரோலா எட்ஜ் +
மோட்டோரோலா ஒன் 5ஜி
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்
மோட்டோரோலா ரேஸ்ர் 5ஜி
மோட்டோரோலா ரேஸ்ர் 2019
மோட்டோரோலா எட்ஜ்

ஒன் பியூஷன் பிளஸ்

மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ்
மோட்டோரோலா ஒன் ஹைப்பர்
மோட்டோரோலா ஒன் பியூஷன்
மோட்டோரோலா ஒன் விஷன்

பட்டையை கிளப்பிய ஐபோன் 12 விற்பனை.. அக்டோபர் மாத லிஸ்டில் முதலிடம்.. அடுத்த இடம் யாருக்கு தெரியுமா?பட்டையை கிளப்பிய ஐபோன் 12 விற்பனை.. அக்டோபர் மாத லிஸ்டில் முதலிடம்.. அடுத்த இடம் யாருக்கு தெரியுமா?

மோட்டோ ஜி 8

மோட்டோ ஜி 8
மோட்டோ ஜி 8 பவர்
லெனோவா கே 12 நோட்
மோட்டோ ஜி ஸ்டைலஸ்
மோட்டோ ஜி 9
மோட்டோ ஜி 9 பிளே
மோட்டோ ஜி 9 பிளஸ்
மோட்டோ ஜி 9 பவர்
மோட்டோ ஜி 5 ஜி
மோட்டோ ஜி 5 ஜி பிளஸ்
மோட்டோ ஜி பாஸ்ட்
மோட்டோ ஜி பவர்
மோட்டோ ஜி ப்ரோ

அப்டேட் ஆனது, டிவைஸ்

மேலும் இந்த புதிய ஓஎஸ் அப்டேட் ஆனது, டிவைஸ் கண்ட்ரோல்கள், கான்வேர்ஷன்களை நிர்வகிக்க எளிதான வழிகள்,தனியுரிமை செட்டிங்ஸ் மற்றும் பலவற்றை கொண்டுவரும். பின்பு இப்போது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் வசதியின் சில சிறப்பு வசதிகளைப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் வசதியில் இருக்கும் Conversations மற்றும் Chat Bubbles மூலம் பல வகையான மெசேஜிங் ஆப்களில் இருந்து உங்கள் உரையாடல்களைப் பார்க்கவும், அதற்கு பதிலளிக்கவும் மற்றும் அவைகளை கட்டுப்படுத்தவும் முடியும். அதேபோல் முன்னுரிமை வழங்கப்பட்ட உரையாடல்கள் உங்கள் லாக் ஸ்க்ரீனில் கூட காண்பிக்கப்படும்.

டுள்ள டிவைஸ்களைக் கட்டுப்ப

மேலும் இந்த புதிய ஓஎஸ் அப்டேட் ஆனது உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ள டிவைஸ்களைக் கட்டுப்படுத்த எளிய. நெறிப்படுத்தப்பட்ட device and media controls வழிகளை அனுமதிக்கிறது. குறிப்பாக வெப்பநிலையை குளிர்விக்கும்படி செட் செய்ய, அல்லது மின் விளக்குகளை அணைக்க என அனைத்தையும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரே இடத்திலிருந்து செய்ய அனுமதிக்கிறது. அதேபோல் பவர் பட்டனை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கப்பட்ட சாதனங்களை நீங்கள் காணலாம் மற்றும் நிர்வகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செட் செய்வதன் மூலம் உங்கள் டேட்டா

அதேபோல் One-time permissions மற்றும் சில புதிய அம்சங்களை செட் செய்வதன் மூலம் உங்கள் டேட்டா எவ்வாறு, எப்போது பகிரப்பட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். மேலும் பல்வேறு வசதிகள் இந்த புதிய ஓஎஸ் அப்டேட்-ல் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Android 11 update only for these 22 Motorola phones; Here is the list!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X