ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு.! காரணம் இதுதான்.!

|

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள பீட்டா வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடும் போராட்டம் காரணமாக அமைதியற்ற சூழல் நிலவுவதால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11

மேலும் ஆண்ட்ராய்டு 11 பற்றி தெரிவிக்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம், ஆனால் இது கொண்டாட்டத்திற்கான நேரம் இல்லை என கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டிவிட்டர் அக்கவுண்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் பற்றிய புதிய விவரங்களை விரைவில் தெரிவிப்பதாக ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் டிவிட்டர் அக்கவுண்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 பீட்டா அறிமுக விழா ஜூன் 3 ஆம் தேதி விர்ச்சுவல் முறையில் நடைபெற
இருந்தது குறிப்பிடத்தக்கது.

இயங்குதளம் மட்டுமின்றி இதர

இந்த விழாவில் புதிய இயங்குதளத்தின் அம்சங்கள் மற்றும் விவரங்களை கூகுள் நிறுவனம் அறிவிக்க இருந்தது, பின்பு இயங்குதளம் மட்டுமின்றி இதர சாதனங்களையும் அறிமுகம் செய்வதாக கூகுள் தெரிவித்து இருந்தது.

இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்!இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்!

பிரீவியூ இம்மாத துவக்கத்தில்

அந்த வகையில் ஆண்ட்ராய்டு 11 பீட்டா அறிமுகம் செய்யப்பட்டதும் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம்
என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு நான்கவது ஆண்ட்ராய்டு 11 டெவலப்பர் பிரீவியூ இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மின்னியாப்பொலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்டு எனம் கருப்பினத்தவரை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால்மிதித்தே கொலை செய்த சம்பவத்தை கண்டித்து கடும் போரட்டங்களை நடைபெற்று வருகின்றன.

பேரில் போலீஸாரால்

அமெரிக்காவின் மின்னியாப்பொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது விசாரணை அதிகாரி, அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார்.

ஜார்ஜியா, ஓகியோ, கென்டக்கி, டெக்சாஸ், கொலம்பியா  ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு

இதில் ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். போலீஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ்உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அதிலும் மினசோட்டா, ஜார்ஜியா, ஓகியோ, கென்டக்கி, டெக்சாஸ், கொலம்பியா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கொன்ற போலீஸ்

இதையடுத்து பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு,
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் கடைகள் சூறையாடப்பட்டன. சில ஹோட்டல்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன.
நாளுக்கு நாள் முற்றி வரும் இந்த போராட்டம் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் வலுப்பெற்று வருகிறது.

Best Mobiles in India

English summary
Android 11: The Beta Launch Show Delayed Amid Protests in the US: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X