கீழடியில் சேதாரமில்லாமல் மூடியுடன் கிடைத்த மண்பானை.! முழு விவரம்.!

|

கீழடி முந்தைய காலத்தில் தொழில் நகரமாக இருந்ததற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றது. இன்னும் பல அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைத்து வருகிறது.

கீழடி கிராமம்

தென்கிழக்கில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் தான் கீழடி கிராமம் அமைத்திருக்கிறது. இங்கு தான் தற்போது அகழ்வாராய்ச்சிநடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழர்நாகரீகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த கீழடி அகழ்வாராய்ச்சியில் தற்சமயம் ஒன்றரை அடி உயரம் கொண்ட மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட 'உலக அதிசய' படம்.. இது எந்த இடம் என்று தெரிகிறதா? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட 'உலக அதிசய' படம்.. இது எந்த இடம் என்று தெரிகிறதா? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.

பாஸ்கரன் தலைமையில் நட

வெளிவந்த தகவலின் அடிப்படையில், இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன் தலைமையில் நடந்து வரும்இப்பணியில் இதுவரை கீழடியில் குழிகள் தோண்டப்பட்டதில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள், பகடை, கல்உழவு கருவி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

சிவாஜியும் நான்தான்., எம்ஜிஆர்ரும் நான்தான்: சிவாஜியும் நான்தான்., எம்ஜிஆர்ரும் நான்தான்: "பேட்டில் கிரவுண்ட் மொபைல்" என்ற பெயரில் வரும் பப்ஜி விளையாட்டு!

முழுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டபோது ஒரு குழியில் முழுமையான பானை மூடியுடன் சேதாரமில்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. பின்பு இதுவரை கிடைத்த பானைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் தற்போது முழுவதும் மூடப்பட்ட நிலையில் இந்த பானை கிடைத்துள்ளது. குறிப்பாக பானையில் உள்ளே பொருட்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

பானை உட்புறம்

மேலும் வெளிவந்த தகவலின்படி, பானை உட்புறம் இறுக்கமாக மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பானையின் உள்ளே பொருட்கள் இருக்கும் பட்சத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கோவிட்-19க்கு எதிராக இந்தியா போராட ரூ. 37 கோடி வழங்கிய சாம்சங் நிறுவனம்.. எதற்காக இந்த தொகை தெரியுமா?கோவிட்-19க்கு எதிராக இந்தியா போராட ரூ. 37 கோடி வழங்கிய சாம்சங் நிறுவனம்.. எதற்காக இந்த தொகை தெரியுமா?

ழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி

குறிப்பாக கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் மூடியுடன் கூடிய பானை கண்டெடுக்கப்பட்டது, ஆய்வாளர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் ஏற்கனவே கல்லாலான விவசாய கருவி, தாயக்கட்டை, பாசி, மணிகள் பெரிய பானைகள் போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Ancient secrets revealed in Keezhadi excavation by new findings of three terracotta pots: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X