2000 ஆண்டுகள் பழமையானது: வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்.!

|

வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் பல தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள்
நடைபெற்றுவருகின்றன.

இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான

குறிப்பாக இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி,ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு, வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், சுடுமண்ணாலான அகல்விளக்கு, தந்தத்திலான பதக்கம், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.

இருக்க பிரச்சனை போதாதா?- நேரடியாக ஆளுங்கட்சியுடன் மோதும் மஸ்க்., இனி என் வாக்கு அந்த கட்சிக்கு தான்!இருக்க பிரச்சனை போதாதா?- நேரடியாக ஆளுங்கட்சியுடன் மோதும் மஸ்க்., இனி என் வாக்கு அந்த கட்சிக்கு தான்!

 சில நாட்களுக்கு முன்பு இரண்டாயிரம்

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட குவளை கண்டறிப்பட்டுள்ளது. மேலும்இதனை தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தனது ட்விட்டர் பகத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!

 கண்டறியப்பட்ட பொருள்

மேலும் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்கள் மூலம் தொன்மையான மனிதர்கள் சுடுமண்ணில் செய்யப்பட்ட பல வகையான பொருள்களை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இது பல ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!

சமீத்தில் சுடுமண்ணால் ஆன

அதேபோல் சமீபத்தில் சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இதன் மூலம் அப்போதைய தொன்மையானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளதை உறுதி செய்வதாக தொல்லியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!

க இங்கு கிடைத்துள்ள பொருட்க

குறிப்பாக இங்கு கிடைத்துள்ள பொருட்களை வைத்து பார்க்கும் போது இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள்என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கடந்த மார்ச் 16-ம் தேதி தொல்லியல் கள ஆய்வுப் பணியினை தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ 50 5ஜி, ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!ரியல்மி நார்சோ 50 5ஜி, ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

குறிப்பாக இப்போது தொல்லியல் கள ஆழத்தை அதிகப்படுத்திய நிலையில் சுடுமண்ணாலான அழகிய வேலைப்பாடுடன் கூடிய அகல்விளக்கு, சிற்ப வடிவிலான விளையாட்டு பொம்மைகள் அதிகளவில் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

பான் கார்டை புதுப்பிக்குமாறு பெண்ணின் செல்போனுக்கு வந்த ஒரு மேசெஜ்: கிளிக் செய்ததும் காத்திருந்த ஷாக்.!பான் கார்டை புதுப்பிக்குமாறு பெண்ணின் செல்போனுக்கு வந்த ஒரு மேசெஜ்: கிளிக் செய்ததும் காத்திருந்த ஷாக்.!

தொல்லியல் மேட்டில் கிடைக்கப்பெற்ற

மேலும் தொல்லியல் மேட்டில் கிடைக்கப்பெற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு அவை யாவும் கால அளவைக் கண்டறியப் பகுப்பாய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெம்பக்கோட்டையில் அடுத்தடுத்த கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்கையில் உலக அளவில் தமிழர்களின் தொன்மையை எடுத்துக் காட்டும் விதமாக பழங்காலப் பொருள்கள் கிடைக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ancient material found during the excavations at Vembakkottai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X