48,500 ஆண்டு பழமையான ஸோம்பி வைரஸ் கண்டுபிடிப்பு.! பதட்டத்தில் மக்கள்.! இது ஆபத்தானதா?
பூமியில் வாழும் மனிதர்களுக்கு எது மோசமான வருடம் என்று யாரிடம் கேட்டாலும், உடனே அவர்கள் 2020 ஆம் ஆண்டை சுட்டிக்காட்டுவார்கள். காரணம், கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் விரைவான எழுச்சியால் உலகம் பேரழிவிற்கு உட்பட்டது. இதை நம்மால் மறக்கவே முடியாது. உலகத்தின் இருண்ட நாட்களைக் நாம் இப்போது ஒரு வழியாகக் கடந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ரஷ்யாவில் 'ஸோம்பி வைரஸ்' (Zombie virus) என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

50,000 ஆண்டு பழைமையான புதிய 'வைரஸ்' கண்டுபிடிப்பு.!
கோவிட்-19 தொற்றுநோய் தாக்குதலே பல பில்லியன் கணக்கான மக்களைப் பீதியில் தள்ளிய நிலையில், இப்போது, ஒரு விஞ்ஞானி குழு சுமார் 50,000 ஆண்டு பழைமையான ஸோம்பி வைரஸ் (Zombie virus) என்ற புதிய வைரஸை ஐஸ் பாறைகளுக்குள் இருந்து கண்டுபிடித்து, வெளியில் எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க இப்போது இந்த ஸோம்பி வைரஸை பற்றித் தான் பேச்சு.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி..!
இது தான் இன்றைய 'வைரல்(ஸ்)' செய்தியாக இருக்கிறது. விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள், சதி கோட்பாட்டாளர்கள் என்று முழு இணையமும் இப்போது இந்த ஸோம்பி வைரஸை பற்றித் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறது. 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்பது போல் ரஷ்யாவின் வேலை புது பீதியைக் கிளப்பியுள்ளது.

உலகத்தை புரட்டிப் போட்ட இன்றைய 'வைரல்(ஸ்)' செய்தி இது தானா?
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டிற்குள் வேகமாக முன்னேறி, இப்போது 2023 ஆம் ஆண்டிற்குள் கால் பதிக்கத் துடிக்கும் மக்களுக்கு, ஏறக்குறைய கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அச்சங்கள் தணிந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய வைரஸ் பற்றி செய்திகள் மக்களைப் பீதி அடையச் செய்துள்ளது.

பனியில் புதைந்திருந்த 48,500 ஆண்டு பழமையான ஸோம்பி வைரஸ்.!
குறிப்பாக, இந்த வைரஸின் பெயர் காரணத்தினாலோ என்னவோ மக்கள் கூடுதல் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். உலகம் முழுவதும் பீதியை கிளப்பியுள்ள இந்த புதிய வைரஸ், சரியாக 48,500 ஆண்டுகளாகப் பனியில் புதைந்திருந்திருக்கிறது.
ரஷ்யா விஞ்ஞானிகளால் வெளியில் எடுக்கப்பட்ட 48,500 ஆண்டுகள் பழமையான 'ஸோம்பி வைரஸ்' புத்துயிர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டஜன் வைரஸ்கள் புத்துயிர் பெற்றுள்ளனவா?
காலநிலை மாற்றம் பண்டைய பெர்மாஃப்ரோஸ்ட்டைக் கரைத்துவிட்டது, இது ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி மனிதர்களுக்குப் பல அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், சுமார் இரண்டு டஜன் வைரஸ்கள் ஆராய்ச்சியாளர்களால் புத்துயிர் பெற்றுள்ளன என்று அறிவித்துள்ளனர்.

13 புதிய நோய்க்கிருமிகள் - ஸோம்பி வைரஸ்
இதில் 48,000 ஆண்டுகளுக்கும் மேலாக பனி ஏரியின் கீழ் உறைந்திருக்கும் ஒரு கொடூரமான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் இருந்து இந்த பழமையான வைரஸ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 13 புதிய நோய்க்கிருமிகள் 'ஸோம்பி வைரஸ்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகும் ஆக்டிவ் நிலையில் வைரஸ் உள்ளதா?
அதிர்ச்சியளிக்கும் விதமாக, வைரஸ்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிக்கியிருந்தாலும் தொற்றுநோயாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, Zombie Virus என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அந்த அளவிற்கு இந்த வைரஸ் பற்றிய செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

யார் இந்த வேலையை செய்தது? இதனால் மனிதர்களுக்கு ஆபத்தா?
ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழு இந்த ஆய்வை நடத்தியது. அமீபா நுண்ணுயிரிகளைப் பாதிக்கக்கூடிய அந்த விகாரங்களை மட்டுமே குறிவைத்துள்ளதால், வைரஸ்களை உயிர்ப்பிப்பதற்கான உயிரியல் ஆபத்து மிகக் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்டுள்ள வைரஸ்களால் இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் பீதியடைய தேவையில்லை.

எதற்காக மற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்?
இருப்பினும், மனிதர்கள் அல்லது விலங்குகளை பாதிக்கக்கூடிய வைரஸ் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது ஆபத்தானது என்று மற்ற விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வைரஸின் பெயர் ஸோம்பி வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால், பல ஸோம்பி திரைப்படங்களை நெட்டிசன்கள் டேக் செய்து, மக்கள் பதட்டத்தை வேடிக்கையாகவும், பயத்துடனும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications