Home
News

அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?

டிஜிட்டல் இந்தியாவில் ஸ்மார்ட்போன் என்பது பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது. அதன்படி சமீபகாலமாக ஸ்மார்ட்போனின் இணைப்பு சாதனமான ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ப்ளூடூத் இயர்பட்ஸ்களும் முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது. நீங்கள் சிறந்த இயர்பட்ஸ் வாங்க திட்டமிட்டிருந்தால் இது உங்களுக்கு சரியான நேரமாகும்.

Noise Buds VS102 Pro இயர்பட்ஸ்

Noise Buds VS102 Pro இயர்பட்ஸ் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது இன்-இயர் ஃபார்ம் ஃபேக்டர், ப்ளூடூத் பதிப்பு 5.3 ஆதரவு, குவாட் மைக் அமைப்பு உள்ளிட்ட பல ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. இன்-டச் கன்ட்ரோல் உடன் 40 மணிநேர ப்ளேபேக் நேரத்துக்கான பேட்டரி ஆயுள் ஆதரவு இதில் இருக்கிறது.

மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?

Noise Buds VS102 Pro விலை

Noise Buds VS102 Pro இயர்பட்ஸ் ஆனது இந்தியாவில் ரூ.1,799 என்ற விலையில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஆனது GoNoise ஆன்லைன் ஸ்டோர் மற்றும் Flipkart தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. புது இயர்பட்ஸ் ஆனது நான்கு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது ஜெட் ப்ளாக், காம் பீஜ், அரோரா க்ரீன் மற்றும் க்ளேசியர் ப்ளூ ஆகும்.

Noise Buds VS102 Pro சிறப்பம்சங்கள்

Noise Buds VS102 Pro இன் இரண்டு குறிப்பிடத்தக்க் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 25dB வரையிலான சத்தத்தை ரத்து செய்யும் ANC ஆதரவு இருக்கிறது. அதேபோல் ENC எனப்படும் சுற்றுச்சூழல் இரைச்சல் ரத்து ஆதரவுடனான குவாட் மைக்குகள் இதில் இருக்கிறது.

Siri மற்றும் Google Assistant

மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது இன்-இயர் ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் ஆன்-இயர் டச் கன்ட்ரோல்கள் உடன் கிடைக்கிறது. கேமிங் பயன்முறை, ஒலி அளவை சரி செய்யும் தன்மை, அழைப்பு கட்டுப்பாடு, Siri மற்றும் Google Assistant ஆகியவற்றுக்கான அணுகல் இதில் கிடைக்கிறது. இயர்பட்ஸ்கள் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்கள் ஆகிய இரண்டுக்கும் இணக்கமான தன்மையைக் கொண்டிருக்கிறது.

மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?

வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட்

Noise Buds VS102 Pro இயர்பட்ஸ் ஆனது 11mm ஸ்பீக்கர் டிரைவர்களை கொண்டிருக்கிறது. அதேபோல் இதில் வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IPX5 மதிப்பீடு சான்றிதழ் பெற்றிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் இல் ப்ளூடூத் 5.3 ஆதரவு உள்ளது. இதன்மூலம் 10 மீட்டர் வரை இயர்பட்ஸ் டூ போனுக்கான இணைப்பு ஆதரவுகள் வழங்கப்படும்.

சிறந்த பேட்டரி ஆயுள் இயர்பட்ஸ்

Noise Buds VS102 Pro இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணிநேரம் வரை விளையாட்டு நேரத்தை வழங்கும். கூடுதலாக சார்ஜிங் கேஸ் இன் மூலம் 34 மணிநேர ப்ளேபேக் நேரத்தை பெறலாம். இந்த இயர்பட்ஸ் இல் இன்ஸ்டாசார்ஜ் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பயனர்கள் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 150 நிமிட விளையாட்டு நேரத்தை பெறலாம்.

மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?

ப்ரீமியம் அம்சங்கள் உடன் ரூ.1,799 விலையில் இயர்பட்ஸ்

Noise Buds VS102 Pro இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் 4 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. சார்ஜிங் கேஸ் எடை 34 கிராம் ஆகும். ஆப்பிள் போன்ற ப்ரீமியம் இயர்பட்ஸ் இல் இருக்கும் அம்சங்கள் இதில் இருக்கிறது. ஆனால் இதன் விலை ரூ.1,799 மட்டுமே என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நீங்கள் புதிய இயர்பட்ஸ் வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ANC, 40 Hours Play time Supports Noise Buds VS 102 Pro Earbuds Launched in India: Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X