3 மாசம் Jio ரீசார்ஜ் இலவசம்.. Anant Ambani-யின் கல்யாண கிஃப்ட் ஆபர்.. உண்மையா? பொய்யா?
படித்ததும் சிரித்து விடவும் என்கிற பாணியில்.. வாட்ஸ்அப் வழியாக போலியான மெசேஜ் ஒன்று பரவி வருகிறது. தனது மகன் ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) திருமணத்தையொட்டி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 3 மாதங்களுக்கு ரூ.799 மதிப்புள்ள இலவச ரீசார்ஜை வழங்குகிறது என்பதே அந்த வாட்ஸ்அப் மெசேஜ் ஆகும். ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜியோ அறிவித்துள்ள இந்த ஆபரை பெற, கீழே உள்ள ப்ளூ லிங்க்-ஐ கிளிக் செய்து உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்யவும் என்றும் அந்த மெசேஜ் கோருகிறது.
அந்த ப்ளூ லிங்க்-ஐ கிளிக் செய்யும் பயனர்கள் மஹாகேஷ்பேக் (MahaCashback) என்கிற அறியப்படாத தளத்திற்குள் நுழைகிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் போதே.. இந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த மெசேஜ் போலியானது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இதை முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவும் (Reliance Jio) உறுதிப்படுத்தியுள்ளது; ஜியோ நிறுவனம் இப்படி ஒரு சலுகையை அறிவிக்கவே இல்லை; இது முற்றிலும் போலியான மற்றும் பணம்பறிக்கும் ஒரு மோசடி வேலையாகும்.

எக்காரணத்தை கொண்டும் இதுபோன்ற போலியான தளங்களின் (Fake Sites) வழியாக ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்றும் பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மைஜியோ ஆப் (MyJio App) அல்லது கூகுள் பே (Google Pay) போன்ற நம்பகமான ஆன்லைன் பேமெண்ட் ஆப்களின் (Online Payment Apps) வழியாக மட்டுமே பயனர்கள் தங்கள் எண்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
எல்லாவற்றை விட முக்கியமான உண்மையாகவே ரிலையன்ஸ் ஜியோ இப்படி ஒரு அபார சலுகையை (Anant Ambani Wedding Celebration Offer) வழங்கினால்.. அதாவது இலவசமாக 3 மாத ரீசார்ஜ் திட்டத்தை வழங்கினால்.. அது நிச்சயம் தலைப்பு செய்தியாகி இருக்கும்; நாடு முழுவதும் உள்ள ஜியோ பயனர்களுக்கு பரவலாக அறிவிக்கப்பட்டு இருக்கும். எனவே இதுபோன்ற சாத்தியமான மோசடிகளில் இருந்து பயனர்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வது நல்லது.
ஜியோ வழியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்றால்.. அது ஜூலை மாத தொடக்கத்தில் வந்த ரீசார்ஜ் கட்டண விலை உயர்வு தொடர்பான அறிவிப்புகள் தான். பார்தி ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலைகளை ஜூலை 3 முதல் உயர்த்துவதாக அறிவித்த வேகத்தில், ஜியோவும் விலை உயர்வை அறிவித்திருந்தது.
முக்கியமான ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை, ரூ.179 ரீசார்ஜ் ரூ.199 ஆகவும், ரூ.455 ரீசார்ஜ் ரூ.509 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பிரபலமான பார்தி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ் ரூ.449 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ்ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.549 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2999 ரீசார்ஜ் ரூ.3599 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், கடைசியாக ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








