Home
News

ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த ஒரு வீடியோ: இனி கையில பணம் வேண்டாம்: UPI QR கோட் வழியா பணம் அனுப்புங்க போதும்.!

கொரோனா காலத்தில் ஆன்லைன் பேடிஎம், கூகுள் பே, போன்பே போன்ற ஆப் வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தன. குறிப்பாக தற்போது நாடு முழுவதும் அதிக மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளையே உபயோகித்து வருகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

ருக்கமாக கூறவேண்டும் என்றால்,

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே, போன்பே போன்ற

அதேபோல் பேடிஎம், கூகுள் பே, போன்பே போன்ற செயலிகள் மொபைல் ரீசார்ஜ்களின் தொந்தரவைக் குறைத்துள்ளன. முன்புமொபைல் பயனர்கள் தங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கடைக்கு சென்று பிடித்த டாப்-அப் திட்டங்களை வாங்க வேண்டிய நிலைமை இருந்தது, ஆனால் இப்போது பயனர்களுக்கு எளிதான ரீசார்ஜ் வசதியை வழங்குகின்றன இந்த அசத்தலான செயலிகள். மேலும் இதுபோன்ற செயலிகள் பயனருக்கு பணம் அனுப்பவும் பெறவும், மொபைல், டி.டி.எச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகளை எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆன்லைன் மூலம் பணம் அனுப்பப்படும் ப

இந்நிலையில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பப்படும் பழக்கம் எந்தளவு உயர்ந்துள்ளது என தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராஅவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பூம்பூம் மாட்டுக்காரருக்குப் பணம்

அதாவது அந்த வீடியாவில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர் தன் மாட்டின் தலையில் UPI QR code-ஐ ஒட்டி அதன்மூலம் வீடு வீடாக சென்று பணத்தை வசூல் செய்கிறார். மேலும் அந்த ஸ்கேனரை பயன்படுத்தி ஒருவர் பூம்பூம்மாட்டுக்காரருக்குப் பணம் அனுப்புகிறார்.

குறிப்பாக இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா, இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குப்பெரிய அளவில் மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்பதற்கு இன்னும் ஆதராம் வேண்டுமா? என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் மாதம் ஆன்லைன்

அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் விற்பனை ஆப்கள் சலுகைகளை அள்ளி வீசிய நிலையில், இந்தியாவில்முன்பு இல்லாத அளவுக்கு தற்போது ஆன்லைன் பேமன்ட்கள் அதிகரித்துள்ளது. மேலும் ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த இந்தவீடியோ தற்போது இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.

துபோன்ற புதிய செயலிகள் ந

குறிப்பாக இதுபோன்ற புதிய செயலிகள் நமது தினசரி வேலைகளை குறைக்கிறது. அதேபோன்று இந்த செயலிகள் பல்வேறு சலுகைகளையும் கொடுக்கிறது. எனவே தான் இந்த செயலிகளை நாட்டில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் UPI அடிப்படையிலான கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தத் தொடங்கியது.இந்தியாவில் PhonePe, PayTM மற்றும் Google Pay போன்ற பல பேமெண்ட் சேவைக்குக் கடுமையான போட்டியை உருவாக்கஇந்நிறுவனம் பல சலுகைகளை அண்மையில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Anand Mahindra shares video of a street performer accepting UPI charges with a bull: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X