Home
News

தன்னுடைய AI Photo-வை பார்த்து விட்டு.. மிரண்டு போன Anand Mahindra.. எதிர்காலம் பற்றி நெகட்டிவ் பேச்சு!

"அடப்பாவிகளா.. பாசிட்டிவ் ஆன விஷயங்களை தேடித்தேடி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுற மனுஷனை.. இப்படி ஒரே ஒரு போட்டோவை போட்டு அவரை பயமுறுத்தி விட்டீங்களே டா.. எதிர்காலத்தை பத்தி நெகட்டிவ்-ஆ பேச வச்சிடீங்களே டா" என்று கூறும்படியாக ஒரு சம்பவம் நடந்துள்ளது!

நாம் இங்கே பேசுவது மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவை (Anand Mahindra) பற்றியும், சமீபத்தில் அவர் பார்த்து பயந்துபோன ஒரு ஏஐ புகைப்படத்தை (AI Photo) பற்றியும் தான். அதென்ன புகைப்படம்? பயந்து போய், நெகட்டிவ் ஆக பேசும் அளவிற்கு அதில் அப்படி என்ன இருந்தது?

தன்னுடைய AI Photo-வை பார்த்து விட்டு.. மிரண்டு போன Anand Mahindra!

நேற்றோ, இன்றோ அல்ல.. இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) ஆனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம் சாட்ஜிபிடி (ChatGPT), கூகுள் பார்ட் (Google Bard) மற்றும் பிங் (Bing) போன்ற ஜெனரேடிவ் ஏஐ டூல்ளை (Generative AI Tools) பிரபலம் அடைந்து கொண்டே போகின்றன.

மறுபுறம், டால்.இ (Dall.E) மற்றும் மிட்ஜர்னி (Midjourney) போன்ற இமேஜ் ஜெனரேஷன் டூல்களானது (Image generation tools), கடந்த ஒருசில மாதங்களிலேயே மிகவும் பிரபலமாகி விட்டன. இவ்வகை டூல்களால் உருவாக்கப்பட்ட ஏஐ புகைப்படங்கள் ஆனது, சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வைரல் ஆகியும் வருகின்றன.

அதிலொரு புகைப்படம் தான் ஆனந்த் மஹிந்திராவின் கண்களில் சிக்கியுள்ளது. அதை தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் பகிர்ந்தோடு நில்லாமல் "ஏஐ ஆனது போலியான படங்கள் மற்றும் செய்திகளை எளிதில் உருவாக்க முடியும் என்பதால், எதிர்காலம் பயங்கரமானதாக இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்த புகைப்படத்தை உருவாக்கிய ஏஐ கலைஞர் எனது ஹோலி கொண்டாட்டத்தின் மகிழ்ச்சிமிகு தருணத்தை கையில் எடுத்துள்ளார். இதே போல நான் செல்லாத இடங்களில் நான் இருப்பது போன்ற புகைப்படங்களை உருவாக்குமாறு, நான் அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று நக்கலாகவும் கூறியுள்ளார்.

ஏஐ வழியாக உருவாக்கப்படும் புகைப்படங்களை கண்டு ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியப்படுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில், 5 வயது சிறுமியாக இருப்பது தொடங்கி 95 வயது பாட்டியாக மாறும் வரையிலாக, ஒரு பெண்ணின் முகத்தை பிரதிபலிக்கும் ஏஐ வீடியோவை பகிர்ந்து "இது மிகவும் பேய்த்தனமான அழகாக இருக்கிறது" என்றும் கூறி இருந்தார்.

நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டு மார்ச் மாதம், முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்ட படங்கள் இணையத்தில் வைரல் ஆனது/ பின்னரே அது ஜெனரேட்டிவ் ஏஐ டூல் ஆன மிட்ஜர்னி-ஐ உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் (Deep Fake) புகைப்படங்கள் என்பது தெரிய வந்தது.

டீப்ஃபேக் போட்டோ என்பது "இது உண்மை தானோ!" என்று நமது கண்களை குழப்பம் அடைய செய்யும் அளவிற்கு அசல் போல இருக்கும். ஆனால் உண்மையில் போலியான ஏஐ போட்டோவாக இருக்கும். நிலைமை இப்படி இருக்கும்போது.. நாளுக்கு நாள் ஏஐ ஜெனரேடட் புகைப்படங்கள் இணையத்தில் பெருகிக்கொண்டே போகும்போது.. எதிர்காலம் பயங்கரமானதாக இருக்கும் என்று ஆனந்த் மஹிந்திரா கூறுவதில் எந்த தவறும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Anand Mahindra Shared His AI Generated Deep Fake Photo in Twitter and Says Going To be Scary Future
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X