இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!

|

இந்திய தொழிலதிபர்களில் பிரதான ஒருவர் ஆனந்த் மஹிந்திரா. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆவார் இவர். இவர் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதோடு துடிப்பான இளைஞர்கள், திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பை வழங்குவதிலும் இவர் வல்லவர் ஆவார். இவரது சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 8.9 மில்லின் ஆகும். இவர் சமூகவலைதளங்களில் தன்னை கவர்ந்த விஷயங்களில் பகிர்வதை எப்போதும் தவறமாட்டார். அதன்படி தற்போது வாழ்க்கையின் தத்துவம் குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பிரபலமான யின் யாங் புகைப்படம்

பிரபலமான யின் யாங் புகைப்படம்

அது சீனாவின் பிரபலமான யின் யாங் புகைப்படமாகும். இரண்டு எதிர் எதிர் விஷயங்களை இணைக்கும் இந்த புகைப்படம் சீனாவில் தாவோயிசம் பரவிய காலத்தில் புகழ் பெற்ற தத்துவம் ஆகும். இதில் ஒரு வட்டத்தில் சுழல்வது போன்ற சரிபாதி கருப்பு (யின்) வெள்ளை (யாங்) வண்ணம் ஆகும். இதன் கருப்புப் பாதியில் வெள்ளை புள்ளியும், வெள்ளைப் பாதியில் கருப்புப் புள்ளியும் இடம்பெற்றிருக்கிறது. இது யின் யாங் சின்னம் என அழைக்கப்படுகிறது. இந்த புகைப்படத்தை தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் சமூகவலைதள பதிவு

பொதுவாக ஆனந்த் மஹிந்திராவின் சமூகவலைதள பதிவு வைரலாவது இயல்பு. அதேபோல் அவர் பகிர்ந்த இந்த வாழ்க்கைத் தத்துவ புகைப்படம் பெரிதளவு வைரலாகிறது. ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட இந்த டுவிட்டர் பதிவில், வாரத்தில் பாதி நிறைவடைந்திருக்கும் இந்த சமயத்தில் இந்த பாதி குறித்த கதையை அறிவதற்கு நல்ல வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படத்தின் விளக்கம்

இதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் முதல் பாதியில் முழு வட்டத்தில் கருப்பு வண்ணம் இருக்கிறது. இது கெட்டது என்பது குறிக்கிறது. அடுத்த வட்டம் வெள்ளையாக இருக்கிறது அது நன்மை என்பதை குறிக்கிறது. பின் அந்த வட்டத்தில் இந்த சரிபாதி இருக்கிறது. அதில் வெள்ளை நிறத்தில் ஒரு கருப்புப் புள்ளி இருக்கிறது. அது நல்லதில் உள்ள கெட்டதை காட்டுகிறது. அதேபோல் கருப்பு நிறத்தில் ஒரு வெள்ளைப் புள்ளி இது கெட்டதில் உள்ள நல்லதை குறிக்கிறது. இறுதியாக முழு வட்டத்தோடு கூடிய புகைப்படம் காண்பிக்கப்பட்டு இதுதான் வாழ்க்கை என காண்பிக்கப்படுகிறது. ஆனந்த் மஹிந்திராவின் இந்த கருத்தை நெட்டிசன்கள் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இது வாழ்க்கையின் சரியான விளக்கம் எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் பல ஈர்ப்பு கருத்துகள்

சமூகவலைதளங்களில் பல ஈர்ப்பு கருத்துகள்

சமூகவலைதளங்களில் பல ஈர்ப்பு கருத்துகளை பதிவிடுவதில் ஆனந்த் மஹிந்திரா வல்லவர். வாகனங்களில் இன்னும் புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டுவிட் செய்திருந்தார். அதாவது சென்னையில் உள்ள ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை என்பவர் தனது ஆட்டோவில் இலவச வைஃபை வசதி, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப் என பயணிகளை கவர பல வசதிகளை வைத்துள்ளார்.

ஆட்டோவுக்கு உள்ளேயே பல சாதனங்கள்

இதுதவிர ஆட்டோவுக்கு உள்ளேயே சிறிய குளர்சாதனப்பெட்டி, சாக்லேட் போன்றவற்றையும் வைத்துள்ளார். அதேபோல் பணம் செலுத்த ஸ்வைப்பிங் மிஷன் வசதியும் வைத்துள்ளார். குறிப்பாக அண்ணாத்துரையின் ஆட்டோவில் செல்லவேண்டும் என சில வாடிக்கையாளர்கள் காத்திருந்து செல்கின்றனர். அந்தஅளவுக்கு தனது ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்கிறார்.

வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்

வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்

12-வது வரை மட்டுமே படித்திருக்கும் அண்ணாதுரை,வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கூகுள், ஹெச்பி போன்ற முன்னணி நிறுவனங்களிடம் இருந்து பேச அழைப்பு வந்துகொண்டுள்ளது. மேலும் சமீபத்தில் The Better India, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையிடம் இதுதொடர்பாக நேர்காணல் மேற்கொண்டுள்ளது. இதை பார்த்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா MBA படிக்கும் மாணவர்கள் இவருடன் ஒரு நாள் இருந்தால் போதும், வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். இவர் வெறும் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல, பேராசிரியர் என்று புகழாரம் தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Anand Mahindra shared a photo about life philosophy on Twitter: Tweet Viral

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X