திடீரென குளிர்சாதன பெட்டியை விட மண்பானை சிறந்தது என்று கூறிய ஆனந்த் மஹிந்திரா.! ஏன்?
தற்போது அதிநவீன சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் அந்த சாதனங்களில் உள்ளது பாதுகாப்பு தன்மையை கூட முழுமையாகத் தெரிந்துகொள்வது நல்லது. அதாவது வீட்டு உபயோக சாதனங்கள் வாங்கும் முன்பு அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகளைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நிறைய நிறுவனங்கள், இது தான் மார்க்கெட்லயே லேட்டஸ்ட் மாடல்ங்க! சூப்பரான பொருளுங்க! இதுல எல்லாமே இருக்குங்க.. New Fridge-ங்க!" - அப்படி இப்படினு ஆயிரம் சொல்லுவாங்க. அதையெல்லாம் அப்படியே நம்பி, கண்களை மூடிக்கொண்டு கொடுக்கும் பொருளை வாங்கிக்கொண்டு வரும் பழக்கம் / வழக்கம் உங்களிடம் இருந்தால்.. தயவு செய்து அதை உடனே மாற்றிக்கொள்ளவும். ஏனெனில் நாம் வாங்கும் பொருட்களில் சிறப்பு அம்சங்கள் என்ன? அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை முழுமையாகத் தெரிந்து கொண்டு அதன்பின்பு தான் பொருட்களை வாங்க வேண்டும்.

அதேபோல் தற்போது வீட்டு உபயோக அத்தியாவசிய சாதனங்களில் ஒன்றாக மாறிவிட்டது குளிர்சாதன பெட்டி (ரெஃப்ரிஜிரேட்டர்), பொதுவாக உணவு பொருட்களை மின்சாரம் மூலம் கெட்டு போகாமல் பார்த்து கொள்ளும் இந்த ரெஃப்ரிஜிரேட்டர். இப்போது தினசரி வாழ்கையில் இந்த சாதனம் கண்டிப்பாக தேவைப்படுகிறது என்றே கூறலாம்.
அதுவும் சீனா மற்றும் தென்கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய புதிய ரெஃப்ரிஜிரேட்டர் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அதுவும் சில நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ரெஃப்ரிஜிரேட்டர் மாடல்களை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குளிர்சாதனப் பெட்டியை (ரெஃப்ரிஜிரேட்டர்) விட மண்பானையே சிறந்தது என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். அதாவது சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்ட வருபவர் ஆனந்த் மஹிந்திரா. குறிப்பாக இவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளிதுமளி ரகங்களாக இருக்கும் என்றே கூறலாம்.
நல்ல கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சில சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிப்பது போன்றவை அவரது வழக்கம். இதோடு நின்று விடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளைப் பகிர்வார். இந்நிலையில் தான் மண்பானை மற்றும் குளிர்சாதனப் பெட்டி குறித்த பதிவை தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், வெளிப்படையாகச் சொல்வதானால், அழகியல் பார்வை மற்றும் வடிவமைப்பு ரீதியாக மண்பானையே மேலானது. நம் பூமி கோளுக்கு ஏற்ற வகையில் நேர்மறையாக உலகம் கவனம் செலுத்தி வரும் சூழலில் பானை நம் வாழ்க்கை முறையில் சிறந்த துணைப் பொருளாக இருக்கும் என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
அதேபோல் பானை மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் விலை, அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பு போன்றவற்றை ஓப்பீடு செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. மேலும் கடந்த ஆண்டு அன்னையர் நாளில் கோவை இட்லி அம்மாவுக்கு தனது நிறுவனம் சார்பாகக் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா. வளர்ப்பு, அக்கறை, தன்னலமற்றவர் என ஒரு தாயின் நற்பண்புகளின் உருவகமாக இருக்கும் கோவை இட்லி அம்மாவையும், அவருடைய பணியையும் ஆதரிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது என்று ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications