Home
News

இதை யாராச்சும் கண்டுபுடிங்கப்பா.. தேவை அதிகம்.. நான் முதலீடு செய்கிறேன்.. ஆனந்த் மஹிந்திரா பரபரப்பு ட்வீட்..

தற்போது பல்வேறு துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரோபோக்கள் மூலம் சில வேலைகளை எளிமையாக செய்ய முடியும். அதேபோல் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மற்றும் ரோபோ (Robot) தொழில்நுட்பங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் வேகமாக முன்னேறி வருகின்றன.

அதேபோல் மனிதனுக்குத் தேவையான பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிற்ற மின்னணு கருவி தான் ரோபோ. குறிப்பாக மனிதனால் உருவாக்கப்படும் இந்த ரோபோ எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன் முடிவு செய்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை யாராச்சும் கண்டுபுடிங்கப்பா.. ஆனந்த் மஹிந்திரா பரபரப்பு ட்வீட்..

இந்நிலையில் ரோபோ ஒன்று ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் வீடியோவை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ட்வீட் செய்துள்ளார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra). இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது தற்போது பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் மாசுபாடு குறித்து கவலை தெரிவித்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தொழில்நுட்பம் மூலம் இதற்கு தீர்சு காண வேண்டும் என்று கூறியுள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா அவர்கள் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஆக்டிவாக இருப்பார்.

இதை யாராச்சும் கண்டுபுடிங்கப்பா.. ஆனந்த் மஹிந்திரா பரபரப்பு ட்வீட்..

அதேபோல் இவர் அவ்வப்போது சாதனை செய்யும் மக்களை ட்விட் மூலம் வாழ்த்தி வருவது வழக்கம். அதன்படி சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான ட்வீட் செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. அதன்படி ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ஆற்றில் உள்ள குப்பைகளை ரோபோ ஒன்று தனியாக சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக இந்த வீடியோவை பகிர்ந்து இது போன்ற ரோபோக்களின் தேவை நம் நாட்டில் அதிகம் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். அதாவது வீடியோவில் காணப்படும் ரோபோ ஆனது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், நம் நாட்டுக்கும் இதுபோன்ற ரோபோக்கள் (robots) தேவை என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இனியாவது இதுபோன்ற அதிநவீன ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. அதுவும் முழுமையான விவரங்களுடன் தொடர்பு கொண்டால் தேவையான முதலீட்டைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

தற்போது அவர் பகிர்ந்த இந்த ரோபோ வீடியோ ஆனது இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. அதேபோல் எக்ஸ் தளத்தில் (ட்விட்டரில்) ஆனந்த் மஹிந்திராவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பதினொரு மில்லியனைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Anand Mahindra said ready to invest in developing water purification robots
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X