அவரை பாத்து நிறைய கத்துக்கணும்: ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையின் தரமான சேவை: ஆனந்த் மஹிந்திரா புகழாரம்.!

|

வாகனங்களில் இன்னும் புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட் செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஷேர் ஆட்டோ

அதாவது சென்னையில் உள்ள ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை என்பவர் தனது ஆட்டோவில் இலவச வைஃபை வசதி, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப் என பயணிகளை கவர பல வசதிகளை வைத்துள்ளார். இதுதவிர ஆட்டோவுக்கு உள்ளேயே சிறிய குளர்சாதனப்பெட்டி, சாக்லேட் போன்றவற்றையும் வைத்துள்ளார்.

Samsung ஸ்மார்ட்போன்கள் மீது இப்படி ஒரு சலுகையா? டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த போன்கள்..Samsung ஸ்மார்ட்போன்கள் மீது இப்படி ஒரு சலுகையா? டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த போன்கள்..

 பணம் செலுத்த ஸ்வைப்பிங் மிஷன்

அதேபோல் பணம் செலுத்த ஸ்வைப்பிங் மிஷன் வசதியும் வைத்துள்ளார். பின்பு அண்ணையர் தினம், குழுந்தைகள் தினம் ஆகிய நாட்களில் தள்ளுபடி விலையில் ஆட்டோ சவாரி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார் அண்ணாதுரை.

விரைவில் இந்தியாவில் அறிமுகம் உறுதி., வருகிறது ஒப்போ ரெனோ 7 சீரிஸ்- 12 ஜிபி ரேம், 50எம்பி சோனி கேமரா: விலை இதோவிரைவில் இந்தியாவில் அறிமுகம் உறுதி., வருகிறது ஒப்போ ரெனோ 7 சீரிஸ்- 12 ஜிபி ரேம், 50எம்பி சோனி கேமரா: விலை இதோ

 ஆட்டோவில் ஆசிரியர்கள் இலவசமாக

மேலும் ஆட்டோவில் ஆசிரியர்கள் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என்றும், அதற்கு காரணம் உலகிலேயேஆசிரியர் பணிதான் சிறந்த சேவை என தெரிவித்துள்ளார் அண்ணாதுரை. தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள்
ஆகிய முன்களப்பணியாளர்களுக்கும் இலவச ஆட்டோ சேவை வழங்குவதாக அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

திட்டமே வேற., மாபெரும் கேமிங் நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்-பில்லியன் டாலர் முதலீடு: சத்யா நாதெல்லா பிளான்!திட்டமே வேற., மாபெரும் கேமிங் நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்-பில்லியன் டாலர் முதலீடு: சத்யா நாதெல்லா பிளான்!

 அண்ணாத்துரையின் ஆட்டோவில்

குறிப்பாக அண்ணாத்துரையின் ஆட்டோவில் செல்லவேண்டும் என சில வாடிக்கையாளர்கள் காத்திருந்து செல்கின்றனர். அந்தஅளவுக்கு தனது ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்கிறார்.

இனி இலவசம் இல்ல., இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்க மாத கட்டணம் செலுத்தனும்- சோதனை தொடக்கம்., விரைவில் வரும் புது அம்சம்!இனி இலவசம் இல்ல., இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்க மாத கட்டணம் செலுத்தனும்- சோதனை தொடக்கம்., விரைவில் வரும் புது அம்சம்!

12-வது வரை மட்டுமே படித்திருக்கும் அண்ணாதுரை,வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கூகுள், ஹெச்பி போன்ற முன்னணி நிறுவனங்களிடம் இருந்து பேச அழைப்பு வந்துகொண்டுள்ளது. மேலும் சமீபத்தில் The Better India, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையிடம் இதுதொடர்பாக நேர்காணல் மேற்கொண்டுள்ளது. இதை பார்த்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா MBA படிக்கும் மாணவர்கள் இவருடன் ஒரு நாள் இருந்தால் போதும், வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். இவர் வெறும் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல, பேராசிரியர் என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.

கூகிள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்யும் வேலை இது தான்.. 'பிராஜெக்ட் ஐரிஸ்' பற்றி தெரியுமா உங்களுக்கு?கூகிள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்யும் வேலை இது தான்.. 'பிராஜெக்ட் ஐரிஸ்' பற்றி தெரியுமா உங்களுக்கு?

மேலும் தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின், அண்ணாதுரையை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் நம்பவே முடியவில்லை. தொடர்ச்சியாக இவரை பார்த்து வருகிறேன். தொழில் மீது இவர் வைத்திருக்கும் மரியாதையை எல்லோரும் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கூகிள் பே மூலம் ஈஸியா Jio, Airtel, Vi, BSNL ரீசார்ஜ் செய்வது எப்படி? ரிவார்டு கூட இருக்கு மிஸ் பண்ணாதீங்க..கூகிள் பே மூலம் ஈஸியா Jio, Airtel, Vi, BSNL ரீசார்ஜ் செய்வது எப்படி? ரிவார்டு கூட இருக்கு மிஸ் பண்ணாதீங்க..

வாடிக்கையாளர்கள் கொடுக்கு

அதேபோல் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தில்தான் நான் சாப்பிடுகிறேன், அவர்கள் தான் எனக்கு முதல் கடவுள் என அண்ணாதுரை உருக்கமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Anand Mahindra praises Annadurai for its quality service: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X