Home
News

முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு: 75000 கோடி முதலீடு.! முழு விவரம்.!

By Gizbot Bureau

ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சோதனை
செய்து வருவதாகவும், விரைவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி

இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு நிறுவனங்களுக்கு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி இயக்குநராக
நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி

ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி

வெளிவந்த தகவலின் அடிப்படையில், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி என்ற இரண்டு நிறுவனங்களுக்கும் ஆனந்த் அம்பானி இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்ஜியோ பிளாட்பார்ம்ஸ் இயக்குனராகவும் ஆனந்த் இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5000 கோடி ரூ

மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இந்த நியூ எனர்ஜி தொழிலில் சுமார் 75000 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது இது சார்ந்த உற்பத்தி பணிகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னெடுக்க உள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஜியோ நெக்ஸ்ட் சாதனத்தின் சிறப்பம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப்ப பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம். மேலும் இந்த சாதனத்தில் ஹை-பில்டர் ஸ்மார்ட் கேமரா வசதியும் உள்ளது எனத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

அதாவது ஆண்ட்ராய்டு சிறப்பு பதிப்பான கோ எடிஷனில் தான் ஜியோபோன் நெக்ஸ்ட் இயங்குகிறது எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் சாதனம் போல் தான் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனமும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தில் 1ஜி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

 ஜியோபோன் நெக்ஸ்ட்

வெளிவந்த தகவலின்படி, ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே செல்பீ கேமரா ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புற கேமரா ஆனது 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு, portrait mode உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

க்ஸ்டின் அதிகாரப்பூர்வ

ஜியோபோன் நெக்ஸ்டின் அதிகாரப்பூர்வ படங்களின்படி, ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும், எனவே இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. JioPhone மற்றும் JioPhone 2 ஐப் போலன்றி, JioPhone Next பல வண்ண விருப்பங்களிலும் கிடைக்கும்.

இது தவிர, ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன் இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜியோ சிம் கார்டு மற்றும் ஜியோ நெட்வொர்க்குடன் மட்டுமே செயல்படும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த சாதனம் ரூ.5000 அல்லது ரூ.6000 விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Anand Ambani joins RIL's two new companies as a team member: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X