காலக்கொடுமை : இனி நம் மீது நாமே சந்தேகம் கொள்வோம்.!
ஒட்டுமொத்த மனித உறவுகளையும் கேள்விக்கு குறியாக்கி விட்டது என்றே தோன்றுகிறது.
15,000 அமெரிக்க டாலர்கள் என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள ரீயல்டால் (RealDoll) எனப்படும் "அடுத்தகட்ட" செக்ஸ் ரோபோட் ஆனது செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் என்பதை மீறி இந்த செக்ஸ் ரோபோட் மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் திறனும் கொண்டது என்று வெளியான அறிக்கை ஒட்டுமொத்த மனித உறவுகளையும் கேள்விக்கு குறியாக்கி விட்டது என்றே தோன்றுகிறது.
மிகப்பெரிய அளவிலான தொழில்நுட்ப உந்துதலில் செயல்பட்டு கொண்டிருக்கும் நாம் அனைவரும், விரைவில் - எதிர்காலத்தில் தொழிநுட்பம் மூலம் தான் இயக்கப்பட இருக்கிறோம் என்கிறது ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வு. அதாவது, எதிர்காலத்தில் செக்ஸ் இயந்திரங்கள் தலை தூக்கும் என்கிறது இந்த ஆய்வு..!

புதிய முகம் :
அதாவது, செக்ஸ் இயந்திரங்கள் தான் எதிர்கால பாலியல் தொழிலின் புதிய முகமாக இருக்க முடியும் என்றும், அவ்வாறாக ரோபோட்கள் தான் எதிர்கால பாலியல் தொழிலாளர்களாக செயல்படும் என்கிறது நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்று..!

குற்ற உணர்ச்சியற்ற :
இதன் மூலம் சட்டப்பூர்வமான பாலியல் தொழில் நடத்தப்படும் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்கு பகுதியில் மரியாதைக்குரிய 'குற்ற உணர்ச்சியற்ற' பாலியல் தொழில் ஆங்கு நடைபெறும் என்றும்வல்லுனர்கள்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆய்வு :
2050-ஆம் ஆண்டிற்குள், ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்கு பகுதிகள் முழுக்க ரோபோக்கள் தான் பாலியல் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இயன் யோமன் மற்றும் மைக்கேல் மார்ஸ் :
இந்த ஆய்வை நிகழ்த்தியது வெலிங்டன் பல்கலைக்கழகத்தின் எதிர்காலவியலாளர் ஆன இயன் யோமன் மற்றும் பாலியல் ஆய்வாளரான மைக்கேல் மார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

யுப்-யும் பகுதி :
2008-ஆம் ஆண்டு மூடப்பட்ட ஆம்ஸ்டர்டாமின் முந்தைய சிவப்பு விளக்கு பகுதியான யுப்-யும் பகுதியை வைத்து தான் இந்த ஆய்விற்கான அனுமானங்களானது உருவாக்கம் பெற்றுள்ளது.

உரிமம் :
ஆவண தகவலின் கீழ், நகர சபை உரிமம் பெற்று இயங்கிய மூடப்பட்ட யுப்-யும் சிவப்பு பகுதிக்கான நுழைவு கட்டணமே 10,000 டாலர்களாம்.

கடத்தல் :
இதனையெல்லாம் ஆய்விற்க்கு உட்படுத்தி வருங்கால பாலியல் தொழில் எப்படி அமைய வேண்டும் என்பதயும், 2040-களில் உள்ள பாலியல் தொழிலுக்காக நிகழ்த்தப்படும் கடத்தல்கள் ஆகியவைகளை மனதிற்க் கொண்டு இயன் யோமன்மற்றும் மைக்கேல் மார்ஸ் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளனர்.

சுகாதார பாதிப்பு :
உடன் வளர்ந்து வரும் சுகாதார பாதிப்புகளான பால்வினை நோய்கள், முக்கியமாக எய்ட்ஸ் போன்ற நோய்கள் போன்றவைகளை பற்றியும் இந்த ஆய்வில் கணிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

உடல் வடிவங்கள் :
பாலியல் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இருக்க உருவாக்கப்படும் ரோபோட்க்களில் அனைத்து இனங்கள், உடல் வடிவங்கள், வயது , மொழிகள் மற்றும் பாலியல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

உத்தரவாதம் :
உடன் ஆய்வின்கீழ் செக்ஸ் மெஷின்கள் / ரோபோ பாலியல் தொழிலாளர்கள் - நுகர்வோருக்கு எந்த விதமான பாலியல் நோய்கள் பரவாத வண்ணம் உத்தரவாதம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.


Click it and Unblock the Notifications