ஐஆர்சிடிசி தலைவலி : புதிய முறை கண்டுபிடித்து சகோதரர்கள் அசத்தல்.!!

By Meganathan
|

இந்தியாவில் ரயில் பயணம் மேற்கொள்வது சற்றே சிரமமான, கடினமான இதோடு அதிகப்படியான கவலைகளையும் கொண்ட காரியம் ஆகும். ரயில் பயணச்சீட்டு பெற்று அதில் எவ்வித பிரச்சனையும் இன்றி பயணத்தை மேற்கொள்பவர்கள் மிகவும் குறைந்த அளவே, இதில் அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் பெரும்பான்மை என்பது அனைவருக்கும் தெரியும்

ஆனால் இந்தியர்கள் இனி எவ்வித தலைவலியும் இல்லாமல், சில க்ளிக்'களை செய்து நிம்மதியாக பயணம் செய்ய முடியும் என்கின்றனர், இந்த சகோதரர்கள். மிக மோசமான ரயில் பயணத்தை அனுபவித்ததால், இதே தலைவலியை மற்றவர்கள் அனுபவிக்க கூடாது என்ற நோக்கில் செயலி ஒன்றை ஷுபம் என்ற ஐஐடி மாணவர் தயாரித்துள்ளார்.

பரிசு

பரிசு

மோசமான ரயில் பயண அனுபவத்தின் பரிசு தான் 'டிக்கெட் ஜக்காட்' எனும் ஆண்ட்ராய்டு செயலி. ஷுபம் பால்டவா மற்றும் ருனல் ராஜூ இணைந்து இந்த செயலியை வடிவமைத்துள்ளனர்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

ஐஐடி கராக்பூரில் நடைபெற்ற சர்வதேச வியாபார யுக்தியின் ஆண்டு விழாவில் இந்த செயலி ரூ.1.5 லட்சம் பரிசு தொகை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பயணச்சீட்டு

பயணச்சீட்டு

அவசர நேரத்தில் முன்பதிவு செய்ய நேரமில்லாமல் ரயிலில் எப்படி பயணிப்பது, எங்கு செல்வது என தெரியாமல் இருப்போருக்கு இந்த செயலி உதவுகின்றது.

இடம்

இடம்

இந்த செயலியில் நீங்கள் செல்ல வேண்டிய இடம், நீங்கள் இருக்கும் இடம் போன்றவைகளை பதிவு செய்தால், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து பயணிக்க வேண்டிய இடத்திற்கான ரயில் நேரங்கள், இருக்கை சார்ந்த தகவல்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி வழங்குகின்றது.

க்ளியர்ட்ரிப்

க்ளியர்ட்ரிப்

இந்த செயலி க்ளியர்ட்ரிப் நிறுவனத்துடன் இணைந்து சர்வர் சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
An App To Tackle Train Reservation problems Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X