நோக்கியா மாடலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல்? - உண்மை இதுதான்!

|

800 ஆண்டுகள் பழமையான மொபைல் போன்ற கருவி ஒன்றை கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் உலகம் எங்கிலும் உள்ள கான்ஸ்ப்பிரஸி தியேரிஸ்ட்ஸ் (conspiracy theorists) எனப்படும் சதி ஆலோசனை கோட்பாடாளர்கள் தத்தம் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் இருக்க மறுபக்கமோ இது புரளியின் உச்சம் என்ற கருத்தும் வலுக்கத் தொடங்கியது.

நோக்கியா மாடலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல்? - உண்மை இதுதான்!

800 வருட பழமையான மொபைல் போன்ற கருவியானது ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கலாம் அல்லது டைம் டிராவல் செய்து காலத்தை தாண்டி பயணத்தில் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் போன்ற தகவல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.

டு தி டெத் மீடியா (tothedeathmedia.com) என்ற கான்ஸ்ப்பிரஸி தியேரிஸ்ட்ஸ் வலைதளம் ஆனது "13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, மொபைல் போன் போன்று காட்சி அளிக்கும் பொருள் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்ட்ரியாவில் கண்டுப்பிடித்துள்ளனர்" என தெரிவித்தது.

இதற்கு பின்னால் உள்ள உண்மை நிகழ்வு குறித்து பார்க்கையில் ஜெர்மன் சிற்பி கார்ல் வீங்கார்ட்னர் 2012 ஆம் ஆண்டு இந்த மொபைல் வடிவ களிமண் பொருட்களை உருவாக்கியுள்ளார். இது பண்டைய சுமேரியாவை சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கும் விதமாக வடிவமைத்துள்ளார். இதுகுறித்து அவர் ஹஃபிங்டன் போஸ்ட் என்ற தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

கார்ல் வீங்கார்ட்னர் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர். இவர் தனது தயாரிப்பு குறித்த புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை ஒருவர் பாபிலோநோக்கியா என்று அழைத்துள்ளார். இந்த புகைப்படத்தை மையமாக வைத்தே தகவல்கள் பரவின. ஆனால் இதுகுறித்து தனக்கே தெரியாது எனவும் யுஎஃப்ஓ-க்கள் மற்றும் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து தான் நம்பவில்லை எனவும் அவர் கூறினார்.

Source: www.huffingtonpost.in

Best Mobiles in India

English summary
An 800 year old mobile phone was has been found with a cuneiform writing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X