விமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.!
இந்த ஏடிஎம் இயந்திரம் பேலெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது, இந்நிறுவனம் வியாபாரங்களுக்கு தேவையான க்ரிப்டோகரென்சி சேவைகளை வழங்கி வருகிறது .
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது, குறிப்பாக இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு உதவும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஸ்கிபோல விமான பயனிகள் யூரோக்களை க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

பின்னர் ஸ்கிபோல் விமான நிலையம் வரும் பயனிகள் தங்களது ரொக்கத்தை பிட்காயின் மற்றும் எத்திரியம்களாக மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை அடிப்படையில் மட்டுமே இந்த ஏடிஎம் இயந்திரம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

6 மாதம்:
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் உள்ள பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் 6 மாதங்களுக்கு மட்டுமே நிறுவப்பட்டிருக்கும், பின்பு இது
போன்ற ஏடிஎம் பெறும் முதல் விமான நிலையம் இது என ஸ்கிபோல் தகவல் தெரிவித்துள்ளது.

சேவைப் பிரிவு தலைவர்:
விமான பயனிகளுக்கு மிகவும் வித்தியாச வழிமுறைகளை வழங்க முயற்சி செய்கிறது என ஸ்கிபோல் விமான நிலையத்தின் சேவைப் பிரிவு தலைவர் கூறியுள்ளார். மேலும் பல்வேறு மக்களுக்கு பயன்தரும் வகையில் உள்ளது.

நிறுவனம்:
இந்த ஏடிஎம் இயந்திரம் பேலெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது, இந்நிறுவனம் வியாபாரங்களுக்கு தேவையான க்ரிப்டோகரென்சி சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா
உலகில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வசதியை ஆஸ்திரேலியா அறிமுகம் செய்தது, மேலும்
க்ரிப்டோகரென்சி முறை உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications