மனித இனத்தை காப்பாற்ற முதல் குரல்..!!

By Meganathan
|

தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து மகிழ்விக்கும் அதே நேரத்தில் மிகவும் உஷாராகவும் இருக்க வேண்டும் என்கின்றது அம்னெஸ்டி எனும் சர்வதேச நிறுவனம்.

உலகம் முழுக்க ரோபோட்டிக்ஸ் சந்தை அதிவேக வளர்ச்சியில் பயணித்து கொண்டிருக்கும் நிலையில் அம்னெஸ்டி நிறுவனத்தின் முயற்சி உலகின் சூப்பர் பவர் நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்..

மாநாடு

மாநாடு

ஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஐ.நாவின் ஆயுதங்கள் சார்ந்த மாநாட்டிற்கு முன் அம்னெஸ்டி சர்வதேச நிறுவனம் கொல்லுகிற ரோபோட்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளது.

கடிதம்

கடிதம்

தாணியங்கி ஆயுதங்கள் மனித இனத்திற்கு ஆபத்தாக இருக்கின்றன என ஐ.நாவின் ஆயுதங்கள் சார்ந்த மாநாட்டின் முதல் நாளில் அம்னெஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடை

தடை

முன்னதாக கொலை செய்யும் ரோபோட் மற்றும் தாணியங்கி ஆயுதங்களின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்கம்

இயக்கம்

மனித உதவி இன்றி இயங்கும் என்பதால் இந்த வகை தொழில்நுட்பம் மிக விரைவில் சாத்தியமாகும் என்பதால் இவைகளுக்கு தடை விதிக்க கோரும் குரல்கள் அதிகரித்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

விழிப்பு

விழிப்பு

இவ்வகை ஆயுதங்கள் சாத்தியமாகும் காலம் நெருங்கி விட்டதால், அரசங்கமும், மக்களும் இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆயுத ஒழிப்பு பிரச்சார இயக்குனர் ரஷா அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

போர்

போர்

மேலும் தாணியங்கி ஆயுதம் மற்றும் ரோபோட்கள் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக அமையும் என்பதால் இந்த சூழல் எளிதாக போர் வரை செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

விதிமுறை

விதிமுறை

கொலை செய்யும் தாணியங்கி ரோபோட்களை தடை செய்ய வேண்டும் என குரல்கள் எழும்பினாலும், இந்த விவகாரத்தில் கடுமையான விதிமுறைகளும் வேலை செய்யும் என கூறப்படுகின்றது.

தாணியங்கி கார்கள்

தாணியங்கி கார்கள்

இதே போன்று தாணியங்கி கார்களும் மக்களுக்கு ஆபத்தாக இருக்கும் என்றும் அவைகளை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் வலுத்தது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை

வழிமுறை

இந்த விவகராத்தில் இவ்வகை தொழில்நுட்பங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதோடு இவைகளை சட்ட அமலாக்க பணிகளிலும் பயன்படுத்தலாம் என அம்னெஸ்டி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Amnesty International Urges UN To Ban Autonomous ‘Killer Robots’. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X