விரைவில் அம்மா மொபைல்ஸ்...! நோக்கியா - அம்மா மொபைல்ஸ் இது நிறைவேறுமா ?
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலிலதா, அம்மா பிரான்ட் ஒன்றை உருவாக்கியிருந்தது அனைவரும் அறிந்ததே அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா இயற்கை அங்காடி, அம்மா திரையரங்கம் என பட்டியல் நீண்ட சமயத்தில் தான் செத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவரின் முதல்வர் பதவியை பறித்தது. இது அனைவரும் அறிந்த செய்தியாக இருந்தாலும் இந்த வரிசையில் நிரைவில் அம்மா மொபைல்சும் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஷாக் ஆகாதீங்க, இப்போதைக்கு இருக்கும் நிலவரங்களை பார்த்தால் விரைவில் அம்மா மொபைல்ஸ் வரும் என்று நோக்கியா தொழிற்சங்க தலைவர் ஏ. சலுந்தர்ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நோக்கியா ஆலையின் நிர்வாகம் கைமாறியதை அடுத்து சென்னையில் இயங்கி வந்த நோக்கியா ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து நோக்கியா ஆலையில் பணிபுரிந்த உழியர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. இந்த நிலைமையில் பாதிக்கப்பட்ட ஊழியர்களை கருத்தில் கொண்டு நோக்கியா ஆலையை ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி நோக்கியா தொழிற்சங்க உருப்பினர்கள் அஇஅதிமுக தலைவி ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மொபைல் நிறுவனம் துவங்கும் பட்சத்தில் தரமான மொபைல் போன்களை குறைந்த பட்சம் ரூ.700க்கு விற்க முடியும் என்று அச்சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விரைவில் அம்மா மொல்ஸும் வெளியாவதில் சந்தேகமே இருக்க முடியாது.
எது என்னமோ பதிவியில் இல்லாவத ஜெயலலிதா அச்சங்கத்தின் உறுப்பினர்களை சந்திப்பாரா, சந்தித்தால் அகர்களுக்கு எந்தளவு உதவுவார் என்ற விவரங்கள் சந்தேகமாகவே இருக்கின்றது.


Click it and Unblock the Notifications