நெசமாத்தான் சொல்றீங்களா? Google ஆண்டவரின் சம்பளம் மட்டுமே இவ்வளவா? கடுப்பான ஊழியர்கள்.!
கூகுள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொத்தாக வேலையை விட்டு தூக்கியது. இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்கள் பல சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக LinkedIn போன்ற வலைதளப்பக்கங்களில் தங்கள் பணிநீக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பல பகிரங்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனத்தை எதிர்த்து அதன் ஊழியர்கள் பலரும் சுந்தர் பிச்சைக்கு எச்சரிக்கை கடிதமும் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் கூகுள் நிறுவனம் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆல்பாபெட் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை கடந்த 2022-ம் ஆண்டில் மொத்த ஊதியமாக சுமார் $226 மில்லியன் (சுமார் 1800 கோடி) பெற்றுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது அங்கே சராசரி ஊழியர்களின் ஊதியத்தை விட 800 மடங்கும் அதிகமாகும்.
அதேபோல் சுந்தர் பிச்சையின் ஊதியத்தில் சுமார் 218 மில்லியன் டாலர் பங்கு ஆப்ஷன்களும் அடங்கும் என்று கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுந்தர் பிச்சைக்கும் கூகுளின் சராசரி ஊழியருக்கும் இடையே உள்ள மிகப் பெரிய ஊதிய இடைவெளி என்பது அங்கே இருக்கும் ஊதிய சமத்துவமின்மை குறித்த விவாதத்தை இணையத்தில் எழுப்பியுள்ளது.

குறிப்பாக கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களின் நலனை விட உயர் அடுக்கில் உள்ளவர்களின் ஊதியத்திற்கு முன்னுரிமை அளிப்பதைச் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதேபோல் சென்ற மாதம் கூகுள் அதன் ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கும் மடிக்கணினிகள், மற்றும் ரிலாக்ஸ் செய்யும் கேஃபிட்டேரிய போன்ற சலுகைகளைக் குறைத்துள்ளதாக தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிறுவனம் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோஸ்-க்கு எளிதாக ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோ ஷேர் செய்யும் வகையில் Nearby Share desktop ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோஸ்-க்கும், வீண்டோஸ்ஸில் இருந்து ஆண்ட்ராய்டு போனிற்கும் ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோ ஷேர் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கூட பலரும் யுஎஸ்பி கேபிள் மூலம் தான் ஃபைல்ஸ், போட்டோ போன்ற அனைத்தையும் ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் கூகுள் கொண்டு வந்துள்ள புதிய வசதி அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த புதிய வசதியானது தற்போது பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இந்த புதிய வசதி அனைத்து பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூகுள் நிறுவனம் பல புதிய அம்சங்களை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








