Home
News

கழிவறை முதல் தூக்கம்வரை: 365 நாட்கள் ஒவ்வொரு வினாடியும் லைவ் ஸ்ட்ரீம் செய்த இளைஞர்!

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் 365 நாட்களின் ஒவ்வொரு நிகழ்வையும் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவரது அனுபவம் குறித்து பார்க்கலாம்.

100 நாட்கள் ஒருவரின் வாழ்க்கை

100 நாட்கள் ஒருவரின் வாழ்க்கை

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அனைவரும் அறிந்ததே. 100 நாட்கள் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வே இந்த நிகழ்ச்சி. ஒரு தனிநபரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, என்ன புரளி பேசுகிறார் என பிறரைபற்றி அறிந்து கொள்ள வேண்டும் என நமக்கு இருக்கும் ஆர்வம் இந்த நிகழ்ச்சியை அடுத்ததடுத்த அத்தியாயங்களுக்கு அழைத்து சென்றது.

ட்ரூமேன் ஷோ என்ற ஆங்கில திரைப்படம்

ட்ரூமேன் ஷோ என்ற ஆங்கில திரைப்படம்

1998இல் வெளியான ட்ரூமேன் ஷோ என்ற ஆங்கில திரைப்படம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த திரைப்படத்தில் ஒருவரின் 24 மணி நேர வாழ்க்கையும் லைவ் ஸ்ட்ரீமிங்கில் காட்டப்படும். இதற்காக தனி சேனலே தொடங்கப்பட்டிருக்கும். அந்த ஊரில் அவரைதவிர பிற அனைவருக்கும் தெரியும் இவர் கண்காணிக்கப்படுகிறார் என்று. இந்த திரைப்படமும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சி போன்றே இருக்கும்.

365 நாட்கள் லைவ் ஸ்ட்ரீம்

365 நாட்கள் லைவ் ஸ்ட்ரீம்

அதேபோல் நிஜ வாழ்க்கையில் ஒருவர் 365 நாட்கள் தான் என்ன செய்கிறேன் என்பதை மக்கள் பார்வைக்காக லைவ் ஸ்ட்ரீமாக வெளியிட்டுள்ளார். ஒரு ஐந்து நிமிடம் கேமராவுக்கு முன்னாள் நின்றாலே படபடக்கும் கேமராவிற்கு ஏற்ப நமது செயல்பாட்டில் மாற்றம் தென்படும்.

மக்கள் பார்வைக்காக லைவ் ஸ்ட்ரீம்

மக்கள் பார்வைக்காக லைவ் ஸ்ட்ரீம்

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 365 நாட்கள் தான் என்ன செய்கிறேன் என்பதை மக்கள் பார்வைக்காக லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளார். தொழில்நுட்பங்கள் நம்மை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து கொண்டே சென்றாலும் பிறரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு ஆண்டு முழுவதும் லைவ்

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு ஆண்டு முழுவதும் அதாவது 365 நாட்களில் 24 மணி நேரமும் என்ன செய்கிறேன் என்பதை மற்றவர்கள் பார்க்கும்படி லைவ் ஸ்ட்ரீமாக வெளியிட்டுள்ளார்.

இளைஞர் மைக்கேல் ஜெர்ரி

இளைஞர் மைக்கேல் ஜெர்ரி

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் மைக்கேல் ஜெர்ரி. இவர் கல்லூரி படிப்பில் இருந்து பாதியிலேயே வெளிவந்து தனது புதிய ப்ராஜெக்ட்டை தொடங்கியுள்ளார். கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த ஓராண்டிற்கு தான் என்ன செய்கிறேன் என்பதை லைவ் ஸ்ட்ரீமாக வெளியிட்டுள்ளார்.

பெட் ரூமிலும், தோள்பட்டையிலும் கேமரா

அதன்படி கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு ஆண்டு முழுவதும் தனது பெட் ரூமிலும், தோள்பட்டையிலும் கேமராவை பொருத்தியுள்ளார். தனிப்பட்ட விஷயம் மட்டுமின்றி வீட்டில் செய்யும் செயல்கள், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, முகம் தெரியாத நபருடன் நடக்கும் வாக்குவாதம் போன்ற அனைத்து விஷயங்களையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

தன்னை குறித்து அறிந்து கொண்டேன்

தன்னை குறித்து அறிந்து கொண்டேன்

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் தான் கழிவறையில் செலவழிக்கும் நேரத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தெரிவித்த மைக்கேல் ஜெர்ரி, முதல் 5 மாதங்களில் தான் என்ன செய்கிறேன் என்பதை வீடியோவாக பார்த்து தன்னை குறித்து அறிந்து கொண்டதாக தெரிவித்தார்.

View this post on Instagram

Special treat #Cannonball

A post shared by Michael Gerry Live Stream (@michaelgerrylivestream) on

சுய விழிப்புணர்வு அதிகரிப்பு

இதன்மூலம் சுய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், மதுப்பழக்கத்தை விட்டு ஆரோக்கியமான உணவு பழக்கங்களுக்கு மாறவேண்டும் என அறிந்து கொண்டதாகவும் கூறினார்.

புத்தகமாக எழுத திட்டம்

புத்தகமாக எழுத திட்டம்

365 லைவ் ஸ்ட்ரீம் வாழ்க்கையில் பல மாற்றங்களை கண்டதாகவும் இந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த வாழ்க்கையை புத்தகமாக எழுத திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த முயற்சி அடுத்தடுத்து பலரால் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
American Man Live Streams His Entire Life For a Whole Year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X