5ஜியை யாராலும் நெருங்க முடியாது அமெரிக்காவுக்கு ஹூவாய் சவால்.!

|

அமெரிக்கா சீனா நிறுவனமான ஹூவாய் மீது பல்வேறு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. இதனால் ஹூவாய் தொலைத்தொடர்பு உள்ளிட்ட சுமார் 60 நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மேலும், சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது கடும் விதிமுறைகள் அமலாக்கியுள்ளார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.

5ஜியை யாராலும் நெருங்க முடியாது அமெரிக்காவுக்கு ஹூவாய் சவால்.!

இந்நிலையில், அமெரிக்காவால் 5ஜியை தொழில்நுட்பத்தையும், மற்ற நிறுவனங்களாலும், இதை செய்து காட்ட முடியாது என்று ஹூவாய் நிறுவனம் சவால் விடும் வகையில் தெரிவித்துள்ளது.

சீனா பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு:

சீனா பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு:

அமெரிக்காவில் சீனா பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வரியை உயர்த்தி இருந்தாலும், இந்த வரிவிதிப்பு அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.

டிரம்ப்-அவசர நிலை பிரகடனம் :

டிரம்ப்-அவசர நிலை பிரகடனம் :

அந்நிய மற்றும் எதிரி நாடுகள் அமெரிக்காவின் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தை அபகரிப்பதாக தெரிவித்த டிரம்ப் இதனைத் தடுக்க தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா தொழில்நுட்பம் பாதுகாக்க:

அமெரிக்கா தொழில்நுட்பம் பாதுகாக்க:

களவாடப்படும் தொழில்நுட்பத்தால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை பாதுகாக்க இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் அப்டேட்க்கு தடை:

கூகுளில் அப்டேட்க்கு தடை:

இதனால் ஹூவாய் போன்களில் கூகுளின் அப்டேட்களும் சில செயலிகளும் செயல்படாது என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது. கூகுள் சேவை இல்லை என்றால் ஹூவாய் நிறுவனம் கடும் பாதிப்படையும் என்று கூறப்பட்ட நிலையில் அவை இல்லாமலேயே தங்களால் சமாளிக்க முடியும்.

பாதிப்பு இல்லை:

பாதிப்பு இல்லை:

அமெரிக்காவின் நெருக்கடிகளை சமாளிக்க தயாராக இருப்பதாக சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேறு எந்த நிறுவனமும் 5ஜியை அடைய முடியாது:

வேறு எந்த நிறுவனமும் 5ஜியை அடைய முடியாது:

தலைமைச் செயல் அதிகாரி சென் செங்பெய் கூறியதாவது : அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் எதுவும் ஹுவாய்யின் 5ஜியைக் கட்டுப்படுத்திவிட முடியாது. அடுத்த சில ஆண்டுகளுக்கு வேறெந்த நிறுவனத்தாலும் எங்களது தொழில்நுட்பத்தை அடைய முடியாது என்றார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
America still leads in technology but China is catching up fast : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X