என்னா மனுசன்யா., ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.3.87 லட்சம் போனஸ்- முதலாளி சொன்ன காரணம் இருக்கே அடடா!

|

நீங்கள் தினசரி வித்தியாசத்தை உருவாக்குகிறீர்கள் என லாஸ் வேகாஸ் கேசினோ ஒவ்வொரு பணியாளர்களுக்கும் $5000 போனஸ் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஊழியர்களுக்கும் $5000 போனஸ் என்ற வீதம் மொத்தமுள்ள 5400 ஊழியர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. போனஸ் என்பது நிறுவனம் ஊழியர்களின் மன உறுதியை பாராட்டி அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கும் ஊதிய பாராட்டு ஆகும். லாஸ் வேகாஸில் உள்ள ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்திருக்கிறது.

ஊழியருக்கு 5000 டாலர் போனஸ்

ஊழியருக்கு 5000 டாலர் போனஸ்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இயங்கு வரும் கேஸினோ விடுதி தங்களது ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்திருக்கிறது. ஒரு ஊழியருக்கு 5000 டாலர் போனஸ் அதாவது ரூ.3.87 லட்சம் போனஸ் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை தி காஸ்மோபொலிட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பில் மெக்பீத் அறிவித்திருக்கிறார். ஒரு ஊழியருக்கு 5000 டாலர் போனஸ் என்ற இவரது அறிவிப்பு வெளியான உடன் அனைத்து ஊழியர்களும் ஆனந்தக் கண்ணீரால் நிரம்ப வழிந்ததாக கூறுப்படுகிறது. நிறுவனத்தில் மொத்தம் 5400 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு ஊழியருக்கு 5000 டாலர் என்று வழங்கப்படும் பட்டத்தில் மொத்தம் 27 மில்லியன் டாலர் செலவாகும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.208 கோடி செலவு என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களின் திறமையை அவர் வெகுவான வகையில் பாராட்டினார்.

ஒவ்வொரு நாளும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறீர்கள்

இதுகுறித்து தி காஸ்மோபொலிட்டன் தலைமை மக்கள் அதிகாரியான டேனியல் இ எஸ்பினோ கூறுகையில், "ஒவ்வொரு நாளும் நீங்கள் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் அறைகளைச் சுத்தம் செய்தாலும், உணவு சமைத்தாலும், அட்டைகளை விநியோகித்தாலும், பானங்கள் விற்பனை செய்தாலும் முன் மேசையில் வேலை செய்தாலும் சரி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நாளும் நீங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

சிறந்த வேலையளிப்பவர்கள் என்ற பட்டியல்

லக்ஸ் கேட்வேஸின் கூற்றுப்படி, அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழின் "சிறந்த வேலையளிப்பவர்கள்" என்ற சமீபத்தில் பட்டியலில் லாஸ் வேகாஸின் காஸ்மோபொலிட்டன் நிறுவனம் இடம் பெற்றிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில், தி காஸ்மோபொலிட்டன் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக மனித உரிமைகள் பிரச்சாரத்தின் "வேலை செய்வதற்கான சிறந்த இடங்கள்" என்பதில் காஸ்மோபொலிட்டன் டாப் இடத்தை பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச மின்சார ஸ்கூட்டர்கள் அறிவித்த கூகுள்

இலவச மின்சார ஸ்கூட்டர்கள் அறிவித்த கூகுள்

அதேபோல் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். ஏதாவது சந்தேகம் என்றாலும் சரி, எதையாவது படித்து அறிந்துக் கொள்ள வேண்டுமானாலும் சரி நமக்கு கைக் கொடுப்பது கூகுள் தான். மனிதனின் இரண்டாவது மூளையாக செயல்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளும் கூகுளில் ஆகச் சிறந்த பயன்பாட்டை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டே வருகிறது. கூகுள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திறக்கு அழைத்து வர நிறுவனம் இலவச மின்சார ஸ்கூட்டர்களை வழங்குகிறது.

ஊழியர்களுக்கு இலவச பேருந்து சேவை

ஊழியர்களுக்கு இலவச பேருந்து சேவை

கூகுள் நிறுவனம் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருவதை ஊக்குவிக்க, இலவச மின்சார ஸ்கூட்டர்களை அறிவித்திருக்கிறது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு இலவச பேருந்து சேவையை வழங்கி வந்தது. தற்போது கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களை ஊக்குவிக்க இலவச மின்சார ஸ்கூட்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய ரைடு ஸ்கூட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்த நிறுவனம் கூகுள் இ-ஸ்கூட்டர் உற்பத்தியாளரான உனகி உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

புதிய

புதிய "ரைடு ஸ்கூட்டர்" திட்டம்

புதிய "ரைடு ஸ்கூட்டர்" திட்டத்தை அறிமுகப்படுத்த கூகுள் இ-ஸ்கூட்டர் உற்பத்தியாளரான உனகியுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. உனாகியின் ஸ்டைலான மாடல் ஒன் ஸ்கூட்டர் விலை ஆனது 990 டாலர் என விற்பனை செய்யப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.75,000 ஆக இருக்கிறது. இதுகுறித்து உனகியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ஹைமன் கூறுகையில், ரைடு ஸ்கூட் திட்டத்தின் பின்னணி கூகுள் ஊழியர்கள் அலுவலகத்தில் பணிக்கு திரும்ப உதவுவது தான் என குறிப்பிட்டார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
America's Las Vegas Casino Employees got $5000 Bonus: Cosmopolitan CEO Announced

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X