தயார் நிலையில் அமெரிக்கா, ஆனால் திடீர்னு என்ன ஆச்சு?

By Meganathan
|

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் எதிர்கால சைபர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்து இருக்கின்றனர். அதன் படி அமெரிக்க வளர்ச்சி மற்றும் இணையம் சார்ந்த அச்சுறுத்தல்களை உடனடி பதிலடி கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறை

வழிமுறை

இதற்கென புதிய வழிகாட்டு வழிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன, இதில் சைபர் தாக்குதல்களுக்கு அரசாங்கம் எந்த விதத்தில் தயாராக இருக்கும் என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பதிலடி

பதிலடி

புதிய வழிமுறைகளில் சைபர் தாக்குல்களுக்கு யார் பதில் அளிப்பது, சைபர் தாக்குதலின் முக்கியத்துவம், போன்றவை இடம் பெற்றுள்ளது.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

'இன்று நாம் சைபர் அச்சுறுத்தல் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம், இந்தத் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதோடு மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கின்றது'. என ஹோம்லாந்து பாதுகாப்பு ஆலோசகர் லிஸா மோனாகோ தெரிவித்தார்.

வெளியீடு

வெளியீடு

சமீபத்தில் 20,000 மின்னஞ்சல் தகவல்கள் வெளியான பிரச்சனையை ஜனநாயக தேசிய குழு எதிர்கொண்டு வரும் நிலையில் புதிய வழிகாட்டு வழிமுறைகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

புதிய வழிமுறைகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஐந்து மடங்கு வேகமாகவும், துரிதமாகவும் எதிர்கொள்ளும் படி இருக்கும் என எலென் நகாஷிமா தன் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

தன்மை

தன்மை

இந்த வழிமுறைகள் ஒவ்வொரு சைபர் தாக்குதலின் தன்மைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளும். உதாரணமாகச் சிறிய அளவு பிரச்சனை எனில் சாதாரணமாக எச்சரிக்கை செய்வது, மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்க வித்தியாசமாக எச்சரிக்கை செய்யும்.

நடவடிக்கை

நடவடிக்கை

ஒரு சைபர் அச்சுறுத்தல் கண்டறியப்பட்டவுடன், அதன் தன்மைக்கு ஏற்ப யாருக்குத் தகவல் அளிக்க வேண்டும், குறிப்பிட்ட தாக்குதலை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பன போன்ற தகவல்களை வழங்கும்.

மறுப்பு

மறுப்பு

ஒவ்வொரு தாக்குதலுக்கும் எவ்வாறு பதிலடி கொடுக்கப்படும் என்ற தகவல் வழங்கப்படவில்லை. குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி எப்படி இருக்கும் என்பது விவரிக்கப்படவில்லை.

இல்லை

இல்லை

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திலும் அமெரிக்க அரசாங்கத்தைக் குறிவைத்து ஐந்த மடங்கு சக்தி வாய்ந்த சைபர் தாக்குதல் இன்று வரை நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா தன்னை காப்பாற்றிக் கொள்ள முன்கூடியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் நோக்கில் மேற்கொண்ட முயற்சியே இது.

Best Mobiles in India

English summary
America has a gameplan to counter a massive cyber attack Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X