ஒபாமா, டிரம்பு வந்தும் பப்பு வேகல.! எப்பிஐ யாலையும் முடியல பா.!
போயிங் 727100- விமானத்தை பயணிகளுடன் கடத்தி 2 லட்சம் அமெரிக்க டாலர்களை பிணயத் தொகையாக பெற்று விமானத்தில் இருந்து தப்பிச் சென்றவர் கூபி கூப்பர். பல்வேறு தொழில் நுட்பத்தின் உதவியோடு எப்பிஐ தேடிய போதும்,
போயிங் 727100- விமானத்தை பயணிகளுடன் கடத்தி 2 லட்சம் அமெரிக்க டாலர்களை பிணயத் தொகையாக பெற்று விமானத்தில் இருந்து தப்பிச் சென்றவர் டிபி கூப்பர்.

பல்வேறு தொழில் நுட்பத்தின் உதவியோடு எப்பிஐ தேடிய போதும், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
45 ஆண்டுகள் கடந்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், விசாரணை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது எப்பிஐ. அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ், பராக் ஒபாமா, டிரம்ப் ஆகியோரது முயற்சியும் கடைசியில் தவிடு பொடியானது தான் மிச்சம்.

எப்பிஐ:
அமெரிக்காவில் வாஷிங்டன்னில் எப்பிஐ எனப்படும் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் தலைமையகம் இருக்கின்றது.
இது 1908ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி உருவாக்கப்பட்டது. இது ஜெ.எட்ஹர் கூவர், தியோடிரோ ருசெவல்ட், சார்லெஸ் சோஜப் போன்அபர்ட்டி ஆகியோரால் துவங்கப்பட்டது ஆகும். இதில், சுமார் 35,104 பேர் உளவாளியாக செயல்பட்டு வருகின்றனர்.

கழுகு பார்வை கொண்டது:
உலகில் எந்த மூலையில் குற்றம் நடந்தாலும், குற்றவாளிகளை சரியாக ஸ்கெட் போட்டு அவர்கள் எதிர்பார்க்காத போது, துல்லியமாக பிடித்துவிடுவதே. இதன் தனிச்சிறப்பு.
மேலும் குற்றம் நடக்காமல் தடுப்பதும், குற்றம் நடந்தாலும் குற்றவாளியை சரியாக பிடிப்பதும் இதன் முதன்மையான வேலையாக இருக்கின்றது. குற்றவாளிகளை விரட்டி பிடிக்கும்.

டான் கூப்பர்:
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில், தனி மனிதனாக ஒருவர் நுழைந்தார். அவர் பிளாக் சூட், வொய்ட் டை அணிந்து கட்சிதமாக பார்ப்பதற்கு ஜென்டில்மேன் போல் இருந்தார்.
இது 1971ம் ஆண்டு மதிய நேரம். சியாட்டில் செல்வதற்கு வந்தார். அவர் டான் கூப்பர் என்று பெயருடன் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார். போயிங் 727100 என்ற
விமானத்தில் ஏறினார். அவருக்கு அப்போது வயது 40 இருக்கும் 6 அடி உயரம். அலட்டல் இல்லாத ஸ்டைல் கேப்டன் கூல் போல ஜாலியாக வந்தார் அவர்.

விமானம் கடத்தல்:
மதியம் 2.50 க்கு விமானம் கிளம்பியது. அப்போது அருகில் இருந்த ப்ளாரென்ஸ் என்ற பெண்ணிடம் ஒரு துண்டு சீட்டை கொடுத்தார். அதில் ஹலோ வணக்கம். நான் இந்த விமானத்தை கடத்த போகின்றேன். என்னிடம் நிறைய வெடிகுண்டுகள் இருக்கின்றன. ஹீரோயிஷம் வேண்டாம் என்று எழுத்தப்பட்டிருந்தது.
அந்த பெண் கூப்பரை பார்க்க அவர் அலட்டிக்கொள்ளாமல், நெக்காக ப்ரீப் கேஷை திறந்தார். அதில் நிறைய வெடிகுண்டுகள் இருந்தன. சிறிது நேரத்தில் அதில் உள்ள பயணிகளையும் பிணயமாக வைத்துக் கொண்டு விமானத்தை கடத்தினார் அந்த கூப்பர்.

2 லட்சம் அமெரிக்கா டாலர்கள்:
இதையறிந்த அமெரிக்காவே ஆட்டம் கண்டது. பிறகு கூப்பரிடம், அனைத்து அதிகாரிகளும் போட்டி போட்டுக்கு கொண்டு பேச முன்ன வந்தனர். விமானம் சியாட்டில் தரையிறங்கும் போது, பயணிகளை விடுவிக்க வேண்டுமானால் 2 எண் கொண்ட சீரியல் எண்களில் 2 லட்சம் அமெரிக்க டாலர் நோட்களும், 4 பாரா சூட்களும் கேட்டார் . சியாட்டில் தரையிறங்கும் போது, டேங்க் நிறைய பெட்ரோல் உள்ளிட்டவை வழங்குவதாக ஒப்புக் கொண்டனர் அமெரிக்கா அதிகாரிகள்.

பயணிகள் விடுவிப்பு:
தறையிங்கிய போது, கேட்டது அனைத்தும் கிடைத்ததால், பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தார் கூப்பர். பிறகு, விமானத்தில் 2 பைலெட், விமானப் பணிப்பெண், இன்ஜினியர் என 4 பேர் மிஞ்சியிருந்தனர். அவர்களுடன் மேக்ஸிநோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

பக்கா பிளான்:
பைலெட்களுடன் கூப்பர் ஆலோசனை நடத்தியபடி மெக்ஸிநோக்கிய 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. விமானம் இறக்கை 15 டிகிரி கீழ் நோக்கி இருக்க வேண்டும். நெபேடா மாகாணத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம் என்று பக்கா பிளான் வைத்து இருந்தார் கூப்பார்.
இத்தனை பிளான்களும் கட்சிதமாக நடந்து கொண்டிருந்த போதும் எந்த வித படபடப்பு இல்லாமல் கூலாகவே இருந்தார் கூப்பர். இரவு 7.30 மணியளவில் மெக்ஸிநோக்கி சென்று கொண்டிருந்தது போயிங் 727100.

ராணுவ விமானத்துக்கும் கல்தா:
கூப்பர் சென்று கொண்டிருந்த விமானத்தின் மேல் ஒன்றும், கீழ் ஒன்றும் என இரண்டு ராணுவ விமானங்களும் பின் தொடர்ந்தன. மேலும், சிறிது இடைவெளி விட்டு மற்றொரு விமானமும் கூப்பரை பின்தொடரந்தது சென்றது.
விமானத்தில் இருந்தவர்களை காக்பீட்டிற்குள் அனுப்பி வெளியே வரக் கூடாது என மிரட்டினார் கூப்பர். இரவு 8.13 மணிக்கு சட்டென்று விமானத்தில் பின் பகுதியில், எடை குறைந்தது.

எங்கு சென்றார் கூப்பர்:
நெபேடா விமான நிலையத்தில் தரையிரங்கிய போது, கூப்பர் விமானத்தில் இல்லை. அவர் எப்படி தப்பினார் என்றும் தெரியவில்லை. கூப்பரை கண்கொத்தி பாம்பு போல பின் தொடர்ந்த 3 ராணுவ விமானங்கள் கண்களிலும் தென்படவில்லை. அவர் எப்படி தப்பினார் என்று அனைவருக்கும் கேள்விகள் எழுந்தன.

கூபி கூப்பர் என வெளியிட்ட பத்திரிக்கை:
உடலில் பணத்தை கட்டிக்கொண்டு குதித்து இருக்க வேண்டும் என்று எப்பிஐ முடிவுக்கு வந்தது. டான் கூப்பர் என்று வெளியிடுவதற்கு பதிலாக டிபி கூப்பர் என்று செய்தியில் தவறுதலாக அச்சிட்டு வெளியிட்டது ஒரு பத்திரிக்கை.
இதுவே அவரது பெயர் ஆனது.8.13 மணிக்குத்தான் குதித்து இருக்க வேண்டும். எந்த இடத்தில் குதித்தான் என்றும் தேட துவங்கினார்கள்.
பயணிகளின் உதவியோடு கூப்பரின் மாதிரி படம் வரையப்பட்டு நாடு முழுவதும் அனுப்பட்டது.

பிரமாண்டமாக தேடினார்கள்:
சங்கரின் ரோபோ படத்தில் வருவது போல பிரமாண்டமாக ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆயிரம் ஊழியர்கள் என எந்த இயத்திலும் சேராத ஒருவனை இந்த அளவுக்கு தேடினார்கள். அப்போதும் அவர்களுக்கு ஒரு குழுவும் சிக்கவில்லை. விமானத்தில் இருந்த கூப்பரின் கைரேகை, டை கிளிப்கல் மட்டும் தான் இருந்தது.

பரிசுத் தொகை அறிவிப்பு :
கூப்பர் குறித்து தகவல் தருவோருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. மேலும், பொது மக்களின் பார்வைக்கு கூப்பரிடம் கொடுக்கப்பட்ட சீரியல் நம்பர் பணம் குறித்து தகவல்களும் வெளியிட்டது. விமானிகளுக்கு கூப்பர் எங்கு குதித்தார் என்று தெரியவில்லை என்று இதனால் தேடுதல் வேட்டையும் எல்லையும் அதிகரித்தது.

9 ஆண்டு கழித்து சிக்கியது டாலர்:
சுமார் 9 ஆண்டு கழித்து பிரையன் இன்கரம் என்ற 8 வயது சிறுவன் கொலம்பியா ஆற்றின் பகுதியில், குழி தோண்டி விளையாடிய போது, சில டாலர் நோட்கள் கிடைத்தன. இதையறிந்த எப்பிஐ வந்து விசாரணை துரிதப்படுத்தியது.
பிறகு, இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. சிதைந்த நிலையில் கிடைத்த டாலர் நோட்கள் கூப்பருக்கு கொடுப்பட்ட தொகையில், ஒரு பகுதி எனத் தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடினர். அதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

20-21ம் நூற்றாண்டு வரை நீடித்தது:
20 நூற்றாண்டு முதல் 21ம் நூற்றாண்டு வரை நீடித்தது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேடிய போதும், எந்த ஒரு தகவலும் கிடைக்காதால், வழக்கை முடித்துக் கொள்வதாகவும், முதல்முறையாக எப்பிஐ தோல்வியை ஏற்றது.
பல்வேறு நாடுகளில் குற்றங்கள் நடந்தாலும், அனைத்தையும் கண்டுபிடிக்கும் எப்பிஐ தனது நாட்டில் நடந்த குற்றத்தை கண்டுபிடிக்க முடியாமல் முதன் முதலில் கோட்டை விட்டது

அசாத்திய தைரியம்:
இந்த அளவுக்கு உயரத்தில் இருந்தில் யாராலும் பிடிக்க முடியாது. அப்படி குதிக்க வேண்டும் என்றால் அவர் முட்டாளாக இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் அசாத்திய தைரியம் படைத்து இருப்பராக இருக்க வேண்டும் என்று எப்பிஐ ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், டிபி கூப்பர் இறந்திருக்க கூடும் என்று எப்பிஐ தெரிவித்துள்ளது. இருந்த போதும், அவர் உடல் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அவர் அறிவாளி தான்:
டிபி. கூப்பர் 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் இப்படித்தான் செல்ல வேண்டும் சரியாக கணித்து குதித்துள்ளார் என்று அவர் இன்றும் உயிருடன் தான் இருப்பார். நடக்கும் நிகழ்வுகளையும் அவர் பார்த்துக் கொண்டுதான் இருப்பார் என்று கூறுகின்றனர்.
கூப்பர் பாணியை பின்பற்றி நடந்த அனைத்து கடத்தல்களும் தவிடு பொடியாகின. யாராலும் கூப்பரை மிஞ்ச முடியவில்லை. மேலும் இது கூப்பரின் பெயரை உலகிற்கு எடுத்து சென்றது.


Click it and Unblock the Notifications