தாறுமாறான வேகம் கொண்ட எஎம்டியின் எ வரிசை ப்ராசஸர்கள்

Posted By: Karthikeyan
தாறுமாறான வேகம் கொண்ட எஎம்டியின் எ வரிசை ப்ராசஸர்கள்

கணினிகளுக்கான ப்ராசஸர்களை தயாரித்து வழங்கும் நிறுவனமான எஎம்டி தனது எ வரிசையில் வரும் புதிய ப்ராசஸர்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த எ வரிசை ப்ராசஸர்களின் விலை ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை இருக்கும்.

இந்த ப்ராசஸர்கள் கணினிகளில் விரைவான ப்ராசஸிங், தரமான க்ராபிக்ஸ், சூப்பரான செயல்திறம் மற்றும் அதிரடியான கேம்களுக்கான வேகம் ஆகியவற்றை வழங்கும்.

ஒரு சிலர் கணினிகள் படிப்படியாக இறந்து கொண்டிருப்பதாகக் கருதுகின்றனர். ஆனால் இந்த புதிய எ வரிசைப் ப்ராசஸர்கள் கணினிகளுக்கு வேகத்தையும், தரமான க்ராபிக்ஸ் செயல்திறனையும் மற்றும் வீடியோ கேம்களை விரைவாக வழங்கக்கூடிய வசதியையைும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எஎம்டியின் இந்திய மேலாளர் ரவி சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.

இந்த எ வரிசைப் ப்ராசஸர்கள் பாரம்பரிய ப்ராசஸர்களைப் போல் கம்யூடேசனை மட்டும் வழங்காமல் இவை க்ராபிக்ஸ் மற்றும் வேகமான ப்ராசஸிங் சிஸ்டத்தையும் வழங்கும். இந்தியாவில் வீடியோ கேம் விளையாடுபவர்கள்தான் 41 சதவீத இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர் என்று ஐஎஎம்எஐ ஆய்வு கூறுகிறது. அதோடு இந்தியாவில் வீடியோ கேம் விளையாடுபவர்கள் மூலம் இன்டர்நெட் நிறுவனங்கள் கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,300 கோடி சம்பாதித்ததாக இன்னுமொரு தகவல் கூறுகிறது.

மேலும் அகன்ற இணைய தள அலைவரிசை மற்றும் சூப்பரான வீடியோ கேம்கள் இருந்தால் இந்தியாவில் கணினி சந்தை கண்டிப்பாக வளர்ச்சி அடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எஎம்டி நிறுவனம் தரமான க்ராபிக்ஸ் மற்றும் சூப்பரான கேமிங் அனுபவத்தைக் கணினிகளுக்கும் மற்றும் அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கும் வழங்க திட்டமிட்டிருக்கிறது என்று சுவாமிநாதன் கூறுகிறார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்