Home
News

Mobile மட்டுமில்லை Laptop-ஐ கூட 'இந்த' பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்யலாமா? Ambrane-ன் புது டிவைஸ்!

பவர்-பேங்க் என்றதும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய பயன்ப்படும் ஒரு பவர் சோர்ஸ் சாதனம் என்று இந்த டிவைஸை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இது வழக்கமான பவர்-பேங்க் சாதனம் போன்றதல்ல. இது லேப்டாப், மேக்புக் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கும் புது டிவைஸாகும்.

எது லேப்டாப், மேக்புக் போன்ற சாதனங்களை எல்லாம் பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்ய முடியுமா? என்று சிலர் ஆச்சரியத்துடன் பார்ப்பது எங்களுக்கு தெரிகிறது. ஆம், என்பது தான் உங்களுடைய கேள்விக்கான பதில். இதை அழுத்தமாக சொல்ல முன்வந்த புதிய பவர் பேங்க் சாதனம் தான், ஆம்பிரேன் பவர்லிட் அல்ட்ரா (Ambrane Powerlit Ultra) மற்றும் ஆம்பிரேன்பவர்லிட் பூஸ்ட் (Ambrane Powerlit Boost) பவர் பேங்க் டிவைஸ்.

Mobile மட்டுமில்லை Laptop-ஐ கூட பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்யலாமா?

இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்ற ஆம்பிரேன் நிறுவனம், இப்போது புதிதாக 2 ஹை-வேரியண்ட் பவர்ஃபுல் பவர் பேங்க் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இது Ambrane Powerlit Boost மற்றும் Ambrane Powerlit Ultra என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மேக்புக் (MacBook) மற்றும் டைப்-சி லேப்டாப்களை (Type-C Laptops) சார்ஜ் செய்ய அனுமதிக்கும் திறன் கொண்டது.

ஆம்பிரேன் பவர்லிட் அல்ட்ரா மற்றும் பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க்கள் பயணம் செய்ய விரும்பும் அல்லது எப்போதும் பயணத்தில் இருக்கும் பயனர்களுக்கு உகந்தது. பேக்அப் பவர் சோர்ஸ் தேவைப்படும் பயணிகள் மற்றும் லேப்டாப் பயனர்கள் இந்த சாதனத்தை தாராளமாக வாங்கலாம். இவை ஹரியானாவில் உள்ள ஆம்பிரேன் உற்பத்தி நிலையத்தில் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

பவர்லிட் அல்ட்ரா பவர் பேங்க் சாதனம் 25000mah மற்றும் பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் சாதனம் 14400mah திறனுடன் வருகிறது. இவை உண்மையிலேயே பெரிய பேட்டரி திறன் கொண்ட பவர் பேங்க் சாதனங்களாகும். இவை நீடித்து நிலைத்திருக்கும் வகையில் உறுதியான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. உறுதியான நம்பகத்தன்மைக்காக பல அடுக்கு சிப்செட் பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

Mobile மட்டுமில்லை Laptop-ஐ கூட பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்யலாமா?

இந்த பவர் பேங்க்கள் ஒவ்வொன்றும் மூன்று அவுட்புட் போர்ட்களைக் கொண்டுள்ளன. எனவே நீங்கள் ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்யலாம். ஆம்பிரேன் பவர்லிட் அல்ட்ரா 11 எல்இடி இண்டிகேட்டரை கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஆம்பிரேன் பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் சாதனம் பூஸ்ட் ஸ்பீடு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மின்னல் வேக சார்ஜிங் வேகத்தை உறுதி செய்கிறது.

எதிர்பாராத மின் தடைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சமும் இதில் உள்ளது. பவர்லிட் அல்ட்ரா, டைப்-சி லேப்டாப்கள் மற்றும் மேக்புக்குகளை சார்ஜ் செய்ய உங்களை அனுமதிக்கிறது. இது எப்போதும் பயணத்தில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பவர்லிட் பூஸ்ட், மறுபுறம், பவர் டெலிவரி மற்றும் குயிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மற்றும் டைப்-சி லேப்டாப்பிற்கும் சரியானதாக அமைகிறது.

இரண்டு பவர் பேங்க்களும் 180 நாள் உத்தரவாதத்துடன் வருகின்றன. பவர்லிட் அல்ட்ரா சாதனம் கிளாசிக் பிளாக் நிறத்திலும், பவர்லிட் பூஸ்ட் சாதனம் பிளாக் மற்றும் பச்சை நிறத்திலும் கிடைக்கும். ஆம்பிரேன் பவர்லிட் அல்ட்ரா பவர் பேங்கை ரூ.4,999 என்ற விலையிலும், ஆம்பிரேன் பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் சாதனத்தை ரூ.3,999 என்ற விலையிலும் இன்று முதல் Flipkart.com மற்றும் Ambrane இணையதளங்களில் இருந்து வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ambrane Powerlit Ultra and Powerlit Boost Power Bank For Laptops and MacBook Launched In India at Rs 4999 and Rs 3999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X