லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?

|

மொபைல் ஆக்சஸரீஸ் பிராண்டான Ambrane நிறுவனம் இப்போது முதல் முறையாக, 50,000mAh பேட்டரி திறன் கொண்ட Ambrane Stylo Max Power Bank என்ற புதிய பவர் பேங்க் சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியச் சந்தையில் இப்போது 10,000mAh, 20,000mAh என்ற அளவுகளில் எல்லாம் பவர் பேங்க் சாதனம் வாங்க கிடைக்கிறது. ஆனால், இப்போது Ambrane நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய பவர் பேங்க் டிவைஸ் 50,000 mAh திறனுடன் வருகிறது.

50,000 mah சக்தி கொண்ட பவர் பேங்க் டிவைஸ்

50,000 mah சக்தி கொண்ட பவர் பேங்க் டிவைஸ்

இந்த புதிய பவர் பங் சாதனத்தை ஆம்ப்ரேன் நிறுவனம் நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்காகவும், அவுட்டோர்களில் அதிக நாள் முகாமிடுபவர்களுக்காகவும் வடிவமைத்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனத்தின் கெப்பாசிட்டி 50,000 mah என்று முன்பே கூறியிருந்தோம். இந்த பவர் பேங்க் சாதனம், உங்களுடைய ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் லேப்டாப்கள் போன்ற பெரிய சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

Ambrane Stylo Max 50000mAh பவர் பேங்க்

Ambrane Stylo Max 50000mAh பவர் பேங்க்

குறிப்பாக, இதன் பேட்டரி திறன் அதிகம் என்பதனால், நீங்கள் விரும்பும் சாதனங்களைப் பல முறை முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Ambrane Stylo Max 50k mAh பவர் பேங்க் டிவைஸ், அதன் சக்திக்கு ஏற்றார் போல கடினமான வெளிப்புற பாடி மற்றும் 9 அடுக்கு சிப்செட் பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் மற்றும் ஷார்ட் சர்க்யூட்டுகளில் இருந்து இந்த 9 அடுக்கு பாதுகாப்பு உங்களையும் உங்கள் சாதனத்தையும் பாதுகாக்கிறது.

TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!TV, AC-ஐ ரிமோட்டில் மட்டும் OFF செய்கிறீர்களா? அப்போ கரண்ட் பில் எகிறும் - வாம்பைர் பவர் லாஸ் சிக்கல்!

20W சார்ஜிங் அவுட்புட் உடன் குயிக் சார்ஜ் 3.0

20W சார்ஜிங் அவுட்புட் உடன் குயிக் சார்ஜ் 3.0

இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த பவர் பேங்க் டிவைஸ்கள், ஹை-கிரேடியன்ட் மேட் மெட்டாலிக் கேசிங்கில் இணைக்கப்பட்டுள்ளது. இது கச்சிதமாகவும், உறுதியாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த 50k பவர் பேங்க் டிவைஸ் லித்தியம்-பாலிமர் கெப்பாஸிட்டி உடன் 20W சார்ஜிங் அவுட்புட் உடன் குயிக் சார்ஜ் 3.0 போன்ற அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த பவர் பேங்க் ஹை-ஸ்பீட் 2-வே சார்ஜிங்கை கூட ஆதரிக்கிறது. இது இணைக்கப்பட்ட ஒவ்வொரு சாதனத்துடனும் பாதுகாப்பாக சார்ஜ் செய்ய சக்தி வெளியீட்டைத் தானாகவே கட்டுப்படுத்துகிறது.

20W குயிக் சார்ஜிங் பவர் பேங்க்

20W குயிக் சார்ஜிங் பவர் பேங்க்

இந்த ஆம்ப்ரேன் பவர் பேங்க் டிவைஸ் 18W சார்ஜிங் போர்ட் வழியாக சார்ஜ் செய்யப்படலாம். இதன் அதிகபட்ச அவுட்புட் கரண்ட் 5V/2.4A ஆகும். இந்த பவர் பேங்க் டிவைஸ் 20W குயிக் சார்ஜிங்குடன் மாற்று விகிதத்தில் சார்ஜ் செய்கிறது. இதில் இரண்டு USB மற்றும் ஒரு டைப்- C இணைப்புடன், பவர் பேங்க் ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கும் மல்டி டிவைஸ் சார்ஜிங் அம்சத்துடனும் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

Wise Roam ஸ்மார்ட்வாட்ச் பற்றி தெரியுமா?

Wise Roam ஸ்மார்ட்வாட்ச் பற்றி தெரியுமா?

ஆம்ப்ரேன் நிறுவனத்தின் பிற சமீபத்திய வெளியீடுகளைப் பற்றி பேசுகையில், இது இந்தியாவில் Wise Roam ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.28' இன்ச் கொண்ட ரவுண்ட் லூசிட் டிஸ்பிளே மற்றும் பாதுகாப்பிற்காக 2.5D கர்வுட் கிளாஸ் வடிவமைப்புடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 450 nits ஹை-பிரைட்டன்ஸ் அம்சத்தை ஆதரிக்கிறது. வைஸ் ரோமிம் ஸ்மார்ட் வாட்சில் அனைத்து அடிப்படை ஹெல்த் அம்சங்கள் மற்றும் சென்சார்கள் கூட இதில் உள்ளது.

Ambrane Stylo Max Power Bank 50,000 mah பவர் பேங்க் விலை என்ன?

Ambrane Stylo Max Power Bank 50,000 mah பவர் பேங்க் விலை என்ன?

இதய துடிப்பு கண்காணிப்பு அம்சம், இரத்த அழுத்தக் கண்காணிப்பு அம்சம், SpO2 டிராக்கர், மாதவிடாய் கண்காணிப்பு, ஸ்லீப் மானிடர் போன்ற பல அம்சங்களும் இதில் அடங்கும். இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தில் இன்னும் ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளது. சரி, Ambrane Stylo Max Power Bank 50,000 mah பவர் பேங்க் சாதனத்தை என்ன விலையில் வாங்கலாம்? இந்த புதிய பவர் பேங்க் டிவைஸ் ரூ.3,999 என்ற விலையில் Ambrane வலைத்தளம் வழியாகக் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ambrane 50000mAh Stylo Max Power Bank Device launched In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X