ரூ.24 லட்சம் சம்பளம்.. தினமும் 4000 சப்பாத்தி.. அம்பானி வீட்டு சமையல்காரருக்கு ஏன் இவ்வளவு சம்பளம்?
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) உலகில் உள்ள மிகப்பெரிய பணக்காரராகத் திகழ்கிறார். குறிப்பாக இவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என அழைக்கப்படும் இவரது வீடு மும்பையில் அனைவரும் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கிறது. அதுவும் 27 மாடிகள் கொண்ட அண்டிலியா கட்டிடம் ரூ.15,000 கோடி மதிப்புடையது.
குறிப்பாக இந்த கட்டிடத்தைப் பராமரிக்கவும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முகேஷ் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் பல கோடி செலவு செய்து வருகிறார். அதன்பின்பு இந்த வீட்டுக்கு ஒவ்வொரு மாதமும் 70 லட்சம் மின் கட்டணமாக செலுத்தப்படுகிறது.

இந்த கட்டிடத்தில் சமையல்காரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என மொத்தம் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அதிகமானோர் அங்கேயே தங்கிக்கொள்ள இடவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அம்பானி குடும்பத்தினர் மிகவும் எளிய உணவையே விரும்பினாலும், அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மிகவும் சத்தான உணவு வழங்கப்படுகிறது.
அம்பானி குடும்பத்தினர் கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவு, சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பிரெட், குஜராத்தி முறை உணவு மற்றும் சலாட்களையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குத் தினமும் 4000 சப்பாத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த சப்பாத்திகளைத் தயாரிக்கத் தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் சமையல் அறையில் நிறுவப்பட்டு இருக்கிறது.
இந்த இயந்திரத்தைச் சமையல் கலைநிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் தலைமை சமையல்காரர் ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாகி அதிகாரி போன்று செயல்படுகிறார். இங்கு ரொட்டி தயாரிக்கும் ஒரு சமையல்காரருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பளம் வெறும் சமையல் திறனை மட்டுமல்லாமல், அதிக அளவிலான உற்பத்தியைத் துல்லியமாக நிர்வகிக்கும் திறனையும் பிரதிபலிக்கிறது. குறிப்பாக அம்பானி வீட்டு சமையல்காரரின் சம்பளத் தொகுப்பு, பல பட்டதாரி தொழில்முனைவோரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதால் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
குறிப்பாக அண்டிலியா இல்லம் ஆனது தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் 4,532 சதுர மீட்டர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. அதுவும் இந்த ஆடம்பரமான மாளிகையில் உடற்பயிற்சி கூடம், மினி தியேட்டர், மொட்டை மாடி தோட்டம், நீச்சல் குளம், ஸ்பா, கோவில், என இந்த மாளிகையில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறப்படுகிறது.

சிகாகோவை தளமாகக் கொண்ட கட்டிடக் கலைஞர்களான பெர்கின்ஸ் மற்றும் வில் ஆகியோரால் அண்டிலியா கட்டப்பட்டது. மேலும் இந்த அண்டிலியா கட்டிடத்தின் ஆறு மாடிகள் 168 கார்கள் நிறுத்துமளவிற்கு பார்க்கிங் பகுதிக்கெனவே அர்ப்பணிக்கப்பட்டன. அன்டிலியா வீட்டின் ஏழாவது தளத்தில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் மையமாகச் செயல்படுகிறது. இதற்காக, பல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளும், பணியாளர்களும் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் பணியில் இருக்கின்றனர்.
அண்டிலியா மாளிகையின் கூறையில் 3 ஹெலிபேட்கள் உள்ளன. பின்பு ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காகச் சொந்தமாகக் கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது. அதேபோல் முகேஷ் அம்பானி இந்தியாவில் மலிவு விலையில் இணைய சேவை வழங்கியதோடு அனைத்து தரப்பினரும் 4ஜி, 5ஜி இணைய வேகத்தைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். அதேபோல் இவர் அடையாத உயரம் இல்லை, இவர் பெறாத அதிர்ஷ்டம் இல்லை.


Click it and Unblock the Notifications