Home
News

ரொம்ப தேங்க்ஸ் மக்களே.. செல்ல மகனோட கல்யாணத்துக்கு முன்ன முகேஷ் அம்பானிக்கு இப்படி ஒரு குட் நியூஸ்-ஆ!

தனது செல்ல மகன் ஆன ஆனந்த் அம்பானிக்கும், ராதிகாவிற்கும் வருகிற ஜூலை 12 ஆம் தேதி அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதால் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) ஏற்கனவே.. செம்ம பிஸியாகவும் கூடவே செம்ம குஷியாகவும் உள்ளார். இதற்கிடையில் முகேஷ் அம்பானிக்கு "வியாபார ரீதியாக" இன்னொரு மகிழ்ச்சிகரமான விஷயம் நடந்து உள்ளது. அதுவும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் வழியாக! அதென்ன விஷயம்? இதோ விவரங்கள்:

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பை பெற்றுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர் ஆன பார்த்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமும் கூட சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நல்ல அதிகரிப்பை கண்டுள்ளது. ஆனால் ஜியோ அளவிற்கு இல்லை!

மகனோட கல்யாணத்துக்கு முன்ன அம்பானிக்கு இப்படி ஒரு குட் நியூஸ்-ஆ!

ஆனால் இன்னொரு தனியார் நிறுவனமான வோடாபோன் ஐடியா (Vodafone Idea), இன்னமுஞ் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யாத காரணத்தினால் மீண்டும் அதன் சந்தாதாரர் எண்ணிக்கையில் பெரும் சரிவை கண்டுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

அடிச்சு தூக்கிய ரிலையன்ஸ் ஜியோ: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 2.69 மில்லியன் சந்தாதாரர்களுடன் இந்திய தொலைத்தொடர்பு துறையில் தனது கோட்டையை மேலும் வலுப்படுத்தி உள்ளது கடந்த ஏப்ரல் 2024 இல் இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 469.73 மில்லியனிலிருந்து 472.42 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மகனோட கல்யாணத்துக்கு முன்ன அம்பானிக்கு இப்படி ஒரு குட் நியூஸ்-ஆ!

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் உள்ள மொத்த 472.42 மில்லியன் சந்தாதாரர்களில், ஆக்டிவ் ஆக உள்ள சந்தாதாரர்களின் (Active Users) எண்ணிக்கை 433.42 மில்லியனாக உள்ளது. அதாவது ஜியோவின் கீழ் இருக்கும் 91.74% வாடிக்கையாளர்கள் ஆக்டிவ் ஆக உள்ளனர்.

போராடி.. போட்டிபோட்டு ஆட்களை சேர்க்கும் ஏர்டெல்! சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் கடந்த ஏப்ரல் 2024-ல் 0.75 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்தது, அதன் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 385.76 மில்லியனில் இருந்து 386.52 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் கீழ் உள்ள மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 99.17% ஆக்டிவ் யூசர்கள் உள்ளனர்.

மகனோட கல்யாணத்துக்கு முன்ன அம்பானிக்கு இப்படி ஒரு குட் நியூஸ்-ஆ!

வோடாபோன் ஐடியாவானது தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க தயாராக இருந்தாலும் சேராத கூட்டம் இந்தியாவில் இன்னும் 5ஜி சேவைகளை தொடங்காததால் விஐ நிறுவனம் தொடர்ந்து சந்தாதாரர்களை இழந்து வருகிறது. கடந்த ஏப்ரலில் இந்நிறுவனம் 0.74 மில்லியன் சந்தாதாரர்களை இழந்ததன் விளைவாக அதன் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 219.81 மில்லியனிலிருந்து 219.08 மில்லியனாக குறைந்துள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், விஐ தான் குறைந்த எண்ணிக்கையிலான ஆக்டிவ் யூசர்களை தளத்தை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை அதன் 219.08 மில்லியனில் இருந்து 192.64 மில்லியனாக குறைந்துள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் கீழ் உள்ள மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 87.93% மட்டுமே ஆக்டிவ் யூசர்களாக உள்ளனர்.

பரிதாபமான நிலையில் பிஎஸ்என்எல்: அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது கடந்த ஏப்ரல் 2024-ல் 1.23 மில்லியன் சந்தாதாரர்களின் இழப்பை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 88.06 மில்லியனிலிருந்து 86.84 மில்லியனாக குறைந்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எம்என்பி கோரிக்கைகள்: கடந்த ஏப்ரல் 2024-ல் எம்என்பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி கோரிக்கைகளும் அதிகரித்துள்ளனர். அறியாதோர்க்கு எம்என்பி என்றால் பயனர்கள் ஒரு டெலிகாம் ஆபரேட்டரிலிருந்து மற்றொரு தொலைத்தொடர்பு ஆபரேட்டருக்கு மாற அனுமதிக்கும் ஒரு செயல்முறையாகும். ஏப்ரல் 2024-ல் 11.07 மில்லியன் எம்என்பி கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Ambani Rocks BSNL Shocks Jio adds huge number of subscribers BSNL lost more than 1 million users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X