அம்பானியிடம் வேலைபார்க்க ஆசையா? ஆனால் ஜம்மு காஷ்மீர் போகனும்! திட்டம் என்ன தெரியுமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டம் மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

காஷ்மீருக்குள் கால் பதிக்கும் முதல் நபர் அம்பானி!ஜியோவின் மாஸ்டர்பிளன்

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தபடி இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இத்துடன் பலரும் எதிர்பாராத பல புதிய திட்டங்களையும் அம்பானி அறிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் ஜியோ நிறுவனமா?

ஜம்மு காஷ்மீரில் ஜியோ நிறுவனமா?

பல திட்டங்களை அம்பானி அறிவித்திருந்தாலும், அதில் முக்கியமாகப் பார்க்கப்படுவது ஜம்மு காஷ்மீர் திட்டம் தான். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெகு விரைவில் ஜம்மு காஷ்மீரில் துவக்கப்படும் என்று அவர் உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார். யாரும் எதிர்பாக்காத இந்த அறிவிப்பை முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் நோக்கிப் படை எடுக்கும் கார்ப்ரேட்

ஜம்மு காஷ்மீர் நோக்கிப் படை எடுக்கும் கார்ப்ரேட்

இந்திய அரசாங்கம், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், தற்பொழுது ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவது மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் துவங்குவது போன்ற செயல்களில் எந்தவித சிக்கலும் இல்லாத காரணத்தினால் அனைத்து நிறுவனாகிலும் ஜம்மு காஷ்மீர் நோக்கிப் படை எடுத்துள்ளனர்.

அம்பானி அறிவிப்பிக்குபின் : வியக்கவைக்கும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.! அம்பானி அறிவிப்பிக்குபின் : வியக்கவைக்கும் திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!

கால் பதிக்கும் முதல் கார்ப்ரேட் நிறுவனம்

கால் பதிக்கும் முதல் கார்ப்ரேட் நிறுவனம்

படையெடுத்த நிறுவனங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் முதல் கார்ப்ரேட் நிறுவனமாக ஜம்மு காஷ்மீரில் கால் பதிக்கவுள்ளது என்று தெரியவந்துள்ளது. முகேஷ் அம்பானி அறிவித்துள்ள அறிவிப்பின்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் தனது நிறுவனத்தைத் துவங்கி பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்திற்கும் நம்ப முடியாத அறிவிப்பு

ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்திற்கும் நம்ப முடியாத அறிவிப்பு

ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு எதிர்பாராத அறிவிப்பை முகேஷ் அம்பானி அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இத்துடன் கூடுதலாக ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்திற்கும் பல நம்ப முடியாத அறிவிப்புகளையும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். அவை என்ன என்று பார்க்கலாம்.

மலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.!மலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.!

உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம்

உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம்

ஜியோ இந்தியாவில் மிகப்பெரிய ஆப்பரேட்டர் நிறுவனமாக உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் தலை சிறந்த நிறுவனமாக ஜியோ இடம்பிடித்துள்ளது. அதேபோல் உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக ஜியோ மாறியுள்ளது என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.

100Mbps வேகம் முதல் 1Gbps வரை வேகம்

100Mbps வேகம் முதல் 1Gbps வரை வேகம்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ஜிகாஃபைபர் சேவை வெற்றிகரமாக இந்தியாவில் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் துவக்க வேகமாக 100Mbps வேகம் முதல் 1Gbps வரை கிடைக்கும்படி சுமார் 5 லட்சம் பயனர்களிடம் சோதனை செய்து ஜியோ ஜிகாஃபைபர் சேவையை உருவாகியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி?வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி?

செப்டம்பர் 5 முதல் ஜியோ ஃபைபர்

செப்டம்பர் 5 முதல் ஜியோ ஃபைபர்

ஜியோ ஃபைபர் செப்டம்பர் 5, 2019 முதல் இந்தியா முழுவதும் வணிக அடிப்படையில் தொடங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ ஃபைபர் பின்வரும் கட்டண விபரங்களுடன் பின்தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விலையாக ரூ.700 முதல் ரூ.10,000 வரைக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக Jio 1st Day 1st Show திட்டம்

புதிதாக Jio 1st Day 1st Show திட்டம்

வாய்ஸ் காலிங் மற்றும் அனைத்து சேவைகளும் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் காலிங் சேவை மாதத்திற்கு வெறும் ரூ.500 என்ற விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக Jio 1st Day 1st Show என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தடையால் ஒன்னும் பண்ண முடியாது-ஹெச்.ராஜாபாணி தமிழ்ராக்கர்ஸ் பதில்?தடையால் ஒன்னும் பண்ண முடியாது-ஹெச்.ராஜாபாணி தமிழ்ராக்கர்ஸ் பதில்?

ஜியோ செட்டாப் பாக்ஸ்

ஜியோ செட்டாப் பாக்ஸ்

இந்த புதிய சேவையின்படி ஜியோ பயனர்களை தியேட்டரில் வெளியாகும் புதிய திரைப்படங்களை முதல் நாள் முதலே அவர்களின் டிவியில் பார்த்துக்கொள்ளலாம். ஜியோ ஃபைபர் டிவியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ செட்டப் பாக்ஸ் உதவியுடன் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவை 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் துவங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ போஸ்ட்பைட் பிளஸ் சேவை

ஜியோ போஸ்ட்பைட் பிளஸ் சேவை

ஜியோ போஸ்ட்பைட் பிளஸ் என்ற புதிய சேவையின் மூலம், ஜியோ பயனர்கள் ஒரு திட்டத்தைத் தேர்வு செய்து குடும்பத்தினருடன் பல சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இந்த ஜியோ ஃபைபர் சேவையைப் பெறப் பயனர்கள் jio.com அல்லது myjio செயலியைப் பயன்படுத்தலாம்.

மி சூப்பர் சேல்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!மி சூப்பர் சேல்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இன்ப அதிர்ச்சி அளித்த முகேஷ் அம்பானி

இன்ப அதிர்ச்சி அளித்த முகேஷ் அம்பானி

ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்காமல் இருந்ததே இல்லை, அதேபோல் இம்முறையும் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ஜியோ ஃபைபர் நீண்ட கால வருடாந்திர திட்டத்தை எடுக்கும் பயனர்களுக்கு இலவசமாக 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்ஸை வழங்கவுள்ளதாக இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Ambani is the first person to set foot in Kashmir What's Jio's Master Plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X