ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!

|

ஜியோ ஜிகா பைபர் சேவை என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கின்றது. இந்த பைபர் சேவை வழியாக நாம் அளவில்லாமல் வாய்ஸ் கால், 600 டிவி சேனல்களையும் பார்க்க முடியும், மேலும் அளவில்லாமல் இணைய சேவையையும் பயன்படுத்த முடியும்.

ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!

இதற்கு கட்டணமாக மாதம் ரூ.799 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நாம் இலவசமாக ஜியோ ஜிகா பைரை பயன்படுத்த முடியும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது முன்னோட்ட சலுகையாக இருக்கும் என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை எத்ததனை மாதங்களுக்கு இருக்கும் என்றும் பார்க்கலாம்.

ஜியோ டெலிகாம் நுழைவு

ஜியோ டெலிகாம் நுழைவு

கடந்த இரண்ட ஆண்டுகளுக்கு இந்தியா தொலைபேசி சந்தையில் நுழைந்தவுடன் ஜியோ நிறுவனம் சுமார் ஓராண்டுக்கு இலவசமாக தனது வாய்ஸ்கால், இன்டர்நெட், காலர்டியூன், இலவச எஸ்எம்எஸ், மிஸ்டுகால் அலர்ட் உள்ளிட்டவைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களையும் பொது மக்களையும் ஈர்த்தது.

ஜியோ ஜிகா பைபர் சேவை

ஜியோ ஜிகா பைபர் சேவை

ஜியோ நிறுவனம் எவ்வாறு இலவமாக வழங்கி தனது மார்க்கெட்டை வெற்றிகரமாக நடத்துகின்றதோ அதுபோலவே ஜியோ ஜிகா பைபரையும் முழுமையாக வெற்றியடைய செய்ய தற்போது, சேவையை இலவசமாக நாடு முழுவதும் வழங்கி அதிரவிட்டுள்ளது. இது எத்தனை மாதங்களுக்கு இலவமாக கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 ஜியோ பைபர்

ஜியோ பைபர்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஃபைபர்-டு-ஹோம் (FTTH) சேவையையான ஜியோ ஜிகா பைபரில், பிராட்பேண்ட் இணையம், தொலைபேசி சேவை மற்றும் தொலைக்காட்சி செட்-டாப்-பாக்ஸ் ஆகியவற்றின் காம்போ சேவையாக அறிவித்தார்.

ஆகஸ்ட் 12. ஜியோ ஃபைபர் என மறுபெயரிடப்பட்ட இந்த சேவை செப்டம்பர் 5 முதல் இந்தியாவில் பிராட்பேண்ட் புரட்சியைக் கொண்டுவருவதோடு, இந்த சேவையை முதல் கட்டமாக முதற் கட்டணமாக இலவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2500 திருப்பி செலுத்தப்படும்

ரூ.2500 திருப்பி செலுத்தப்படும்

ரிலையன்ஸ் முதன்முதலில் தனது ஜியோ கிகாஃபைபர் சேவையை 2018 ஏஜிஎம்மில் அறிவித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஜியோ கிகாஃபைபர் முன்னோட்ட சலுகையை ரூ .2500 பாதுகாப்பு வைப்புடன் கொண்டு வந்தது.

இந்த வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவால் கட்டணம் வசூலிக்கப்படாது. ஜியோ ஃபைபர். மாற்றாக, முன்னோட்டம் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் பாதுகாப்பு வைப்புத்தொகையாக அவர்கள் செலுத்திய ரூ .2500 பணத்தைத் திரும்பப் பெறலாம் அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

<strong>ரூ.349க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட், வாய்ஸ்கால் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!</strong>ரூ.349க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட், வாய்ஸ்கால் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!

வைப்பு தொகை எவ்வளவு?

வைப்பு தொகை எவ்வளவு?

செப்டம்பர் 5 ஆம் தேதிக்குப் பிறகு, புதிய வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையான ரூ .1500 செலுத்த வேண்டும். ஜியோ ஃபைபர் நிறுவல் கட்டணமாக ரூ .1000 வசூலிக்கும். ஆர்வமுள்ள பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு சேவைக்கு பதிவு செய்யலாம்.

சேவை கிடைக்கும் நகரங்கள்

சேவை கிடைக்கும் நகரங்கள்

ஆரம்பத்தில், ஜியோ ஃபைபர் இணைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், சூரத், வதோதரா, சென்னை, நொய்டா, காஜியாபாத், புவனேஷ்வர், வாரணாசி, அலகாபாத், பெங்களூரு, சூரத், ஆக்ரா, மீரட், விசாக், லக்னோ, ஜாம்ஷெட், ஜாம் ஃபைபர் இணைப்புகள் உள்ளன. ஹரித்வார், கயா, பாட்னா, போர்ட் பிளேர், பஞ்சாப் மற்றும் இன்னும் சில மாநிலங்களில் கிடைக்கின்றது.

<strong>அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ரெட்மி 70-இன்ச் டிவி அறிமுகம்.!</strong>அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ரெட்மி 70-இன்ச் டிவி அறிமுகம்.!

முழுவிவரங்கள் எப்போது

முழுவிவரங்கள் எப்போது

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் திட்டங்கள் ரூ 700 முதல் தொடங்கி 100 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்கும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். உயர்நிலையான 1 ஜி.பி.பி.எஸ் திட்டத்தின் விலை ரூ .10,000. திட்டங்கள் மற்றும் போக்குவரத்தின் முழுமையான பட்டியல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் செப்டம்பர் 5 ஆம் தேதி நிறுவனம் கூடுதல் விவரங்களைத் தரும் நம்பலாம்.

செப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்? ஆர்பிஐ விதிமுறை.செப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்? ஆர்பிஐ விதிமுறை.

2 மாதம் சேவை இலவசம்

2 மாதம் சேவை இலவசம்

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஏற்கனவே 1.5 கோடி பதிவுகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் 1,600 நகரங்களில் 2 கோடி குடியிருப்புகள் மற்றும் 1.5 கோடி வணிக நிறுவனங்களை உள்ளடக்கும் நோக்கில் நிறுவனம் உள்ளது.

நாசா செல்லும் மதுரை டீக்கடைகாரர் மகள்- விண்வெளி அறிவு தமிழனுக்கு உரியது.!நாசா செல்லும் மதுரை டீக்கடைகாரர் மகள்- விண்வெளி அறிவு தமிழனுக்கு உரியது.!

ஜியோ ஜிகா பைபர் சேவை 2 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் வழங்கியதை போல, பைபருக்கும் ஓராண்டுக்கு பல்வேறு சலுகைகள் இலவமாக கிடைக்கலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Ambani declared Jio fiber Free all Over India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X