Home
News

தோற்ற இடத்தில் ஜெயித்த சிங்கப்பெண்.. பணிநீக்கம் செய்த Amazon நிறுவனத்திலேயே உயர் பதவிக்கு தேர்வு!

வாழ்க்கையில் தோற்றுப்போன இடத்தில் ஜெயித்து காட்டுவது என்பது அவ்வளவு எளிதாக காரியமல்ல, அதுவொரு மிகப்பெரும் சவாலாகும். அந்த சவாலை ஒரு சிங்கப்பெண் செய்து காட்டியிருக்கிறார். தன்னை பணியில் இருந்து நீக்கிய அதே நிறுவனத்தில் மீண்டும் உயர் பதவிக்கு தேர்வாகி இருக்கிறார். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

அமேசான் (Amazon) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பைஜ் சிப்ரியானி ( Paige Cipriani) என்னும் பெண் ஊழியர், பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பும், தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் மீண்டும் அதே நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அண்மைகாலமாக, உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பணிநீக்கம் செய்த Amazon நிறுவனத்திலேயே உயர் பதவிக்கு தேர்வான பெண்

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த ஊழியர்களையே, ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்க நிறுவனங்களான மைக்ரோசாப்ட் (Microsoft), மெட்டா (Meta), ட்விட்டர் (Twitter), அமேசான் (Amazon), ஃபேஸ்புக் (Facebook) ஆகியவை பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கிவிட்டன. இன்னும், பணிநீக்கம் தொடரும் என்று அறிவித்து வருகின்றன.

இதனால், தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், நாள்தோறும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு அலுவலகங்களுக்கு சென்றுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம், இந்தாண்டு ஜனவரியில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், வரும் மாதங்களில் 18 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜேசி (Andy Jassy) குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் அவ்வப்போது ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் சியாட்டிலில் (Seattle) உள்ள அமேசான் நிறுவனத்திலும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, அந்த நிறுவனத்தின் சோசியல் மார்க்கெட்டிங் ( Social Marketing) டீம்மில் முக்கிய பொறுப்பு வகித்துவந்த பைஜ் சிப்ரியானி என்ற பெண்ணும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், சிறிதும் கலங்காத பைஜ் சிப்ரியானி, வேறு நிறுவனங்களில் வேலை தேடத்தொடங்கினார். அப்படி 4 மாதங்கள் கடந்த நிலையில், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் (Product Marketing Manager) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு பைஜ் சிப்ரியானி விண்ணப்பித்து, நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

இதையடுத்து கடந்த வாரம் பணியில் சேர்ந்துள்ளார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் இப்போது சீனியர் ரோலில் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து, அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு எங்கு பணிபுரிந்தேனோ, அதே இடத்தில் மீண்டும் உயர்ந்த பதவியில் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளேன்.

இந்த தகவலை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த பணிக்கு மிகவும் நன்றி உள்ளவளாக இருப்பேன். இந்த புதிய பயணம் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பை கொடுக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon woman employee Paige Cipriani who was laid off in January, rejoin company after four months in senior role
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X