இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

|

அமேசான் நிறுவனம் மேற்கொள்ள உள்ள 7,100 கோடி முதலீட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

இதுகுறித்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூறுகையில், இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறு, குறு தொழில்களை ஆன்லைன் மயமாக்கும் வகையில், 100 கோடி டாலர் (சுமார் 7,100 கோடி) முதலீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் 2025-ல் 71,000 கோடி மதிப்பிலான இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எந்த உதவியும் செய்ய முற்படவில்லை

இந்தியாவுக்கு எந்த உதவியும் செய்ய முற்படவில்லை

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமேசான் முதலீட்டால் இந்தியாவுக்கு எந்த உதவியும் செய்ய முற்படவில்லை. அவர்களின் முதலீடு நஷ்டம் அடைந்தால் அதை நாம் ஈடுசெய்ய வேண்டிவரும் என கூறி இருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

100 கோடி டாலர் முதலீடு

100 கோடி டாலர் முதலீடு

இதையடுத்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், அமேசான் இணையதளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய பொருட்களை உலகம் முழுவதிலும் அமேசான் மூலம் ஏற்றுமதி செய்ய முடியும். இதன்மூலம் 2025ம் ஆண்டுக்குள் ஏற்றுமதி மதிப்பை 1,000 கோடி டாலராக அதிகரிக்க முடியும். அது மட்டுமின்றி, இந்தியாவில் அமேசான் மேற்கொள்ள உள்ள 100 கோடி டாலர் முதலீட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன்

இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன்

சுமார் 5.5 லட்சம் சிறு, குறு தொழில்துறையினர், நடுத்தர தொழில்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் நான் ஒவ்வொரு முறை வரும்போதும், இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். இந்திய மக்களின் எல்லையில்லாத ஆற்றல், புதுமைகள் என்னை கவர்ந்திருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தவறாக புரியப்பட்டுள்ளது

கருத்து தவறாக புரியப்பட்டுள்ளது

இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது கருத்து தவறாக புரிந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதில், அமேசான் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. முதலீடுகளை மத்திய அரசு எப்போதும் வரவேற்கிறது. ஆனால், அவற்றை சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும் என்ற பொருளில்தான் தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Amazon will create 1 million jobs by 2025 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X