Amazon Vs Flipkart: நம்பலனாலும் இதான் நிஜம்! ரூ.10,499 முதல் விற்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

|

Flipkart மற்றும் Amazon குடியரசு தின விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.11,999 முதல் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் மட்டுமல்ல மிட்-ரேன்ஜ் மற்றும் ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் எந்தவித புது போன் வாங்கத் திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இது சரியான நேரமாகும்.

அதீத தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்

அதீத தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்

Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டு ஆன்லைன் விற்பனை தளங்களும் பெரும் தள்ளுபடி தின விற்பனையை ஒரே காலக்கட்டத்தில் நடத்துகின்றன. அதாவது அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையும் பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையும் ஏறத்தாழ ஒரே காலக்கட்டத்தில் நடக்கிறது. இந்த தினங்களில் ஏணைய முன்னணி ஸ்மார்ட்போன்கள் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.11,999 முதல் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ரூ.11,999 முதல் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

சாம்சங், ரெட்மி, ஐக்யூ, லாவா உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் ரூ.15,000க்கு கீழ் என தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனான நத்திங் போனும், ப்ரீமியம் ஸ்மார்ட்போனான ஆப்பிள் ஐபோனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

புதிய போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் நடக்கும் குடியரசு தின தள்ளுபடியை தவறவிடாதீர்கள். பிளிப்கார்ட் மற்றும் அமேசான் குடியரசு தின விற்பனையில் ரூ.11,999 முதல் கிடைக்கும் 5ஜி போன்களின் பட்டியலை பார்க்கலாம்.

Galaxy M13 5G

Galaxy M13 5G

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் Galaxy M13 5G ஸ்மார்ட்போனானது ரூ.11,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது அக்வா க்ரீன் வண்ண விருப்பத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் 29 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் போன் 1

நத்திங் போன் 1

பிளிப்கார்ட்டில் நத்திங் போன் 1 ஆனது தற்போது பிளாட் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. நத்திங் போன் 1 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.25,999 என கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆனது தள்ளுபடி விலையில் ரூ.27,999 என கிடைக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.35,499 என கிடைக்கிறது. இந்த அனைத்து வேரியண்டும் ரூ.1000 என்ற கூடுதலாக வங்கி தள்ளுபடியும் கிடைக்கிறது.

iPhone 13

iPhone 13

iPhone 13 ஆனது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த ஃப்ளாக்ஷிப் ஐபோன் மாடல் ஆனது ரூ.8,901 என்ற பிளாட் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபோன் 13 மாடலை ரூ.60,999 என வாங்கலாம்.

ஐபோன் 14

ஐபோன் 14

அதேபோல் பிளிப்கார்ட் இல் ஐபோன் 14 ஆனது ரூ.73,990 என்ற ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதேபோல் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.79,900 என தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ரெட்மி 11 பிரைம்

ரெட்மி 11 பிரைம்

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.12,999 என்ற விலையில் அமேசானில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டர் பிளாக் வண்ண விருப்பத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

இதில் 50 எம்பி டூயல் கேமரா மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இது இயக்கப்படுகிறது. 90 ஹெர்ட்ஸ் முழு எச்டி+ டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பி கேமரா ஆதரவு இதில் இருக்கிறது.

Lava Blaze 5G

Lava Blaze 5G

Lava Blaze 5G ஸ்மார்ட்போனானது ரூ.10,499 என்ற விலையில் அமேசானில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது க்ளாஸ் ப்ளூ வண்ண விருப்பத்துடன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது 5ஜி ரெடி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. 50 எம்பி ஏஐ டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Vs Flipkart: Best 5G Smartphones Available at Rs.10,499.. Budget, Mid Range, Premium 5G Smartphone in List.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X