நிலைமையை புரிந்துகொண்டு அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்கும் அமேசான்.! சரியான முடிவு.!

|

கொரோனாத தொற்றுநோயால் பல்வேறு இடங்கள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. குறிப்பாக கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சில கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் இன்னும் கிடைத்துக்
கொண்டுதான் இருக்கின்றன.

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

இந்த நிலையில் அத்தியாவசய பொருட்களை மட்டுமே வாங்குவதற்கு முன்னுரிமை அளிப்பது குறித்து அமேசான் இந்தியா தற்சமயம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்று பார்ப்போம்.

 இ-காமர்ஸ் இயங்குதளம்

இ-காமர்ஸ் இயங்குதளம்

குறிப்பாக இதுதொடர்பாக அமேசான் இந்தியா ஒரு வலைப்பதிவு இடுகையில், இ-காமர்ஸ் இயங்குதளம் தயாரிப்புகளுக்கான கோரிக்கைகளில் பெரும் அதிகரிப்பைக் காண்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்.!அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 98-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்.!

மேசான்

பின்பு இது இயற்கையானது என்றும், மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அமேசான் அதன் சேவைகளை தொடரும், இருப்பினும் அவை சில தயாரிப்பு வகைகளுக்கு மட்டுப் படுத்தப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற உயர் முன்னுரிமை

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு ஸ்டேபிள்ஸ், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு, சுகாதார பராமரிப்பு,சுகாதாரம்,தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பிற உயர் முன்னுரிமை தயாரிப்புகள் போன்றவற்றில் தற்போது முக்கியமான தயாரிப்புகளை வழங்குவதற்கான கிடைக்கக்கூடிய பூர்த்தி மற்றும் தளவாட திறனை நாங்கள் தற்காலிகமாக முன்னுரிமை செய்கிறோம்" என்றும் அமேசான் இந்தியா தனது வலைப்பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

முன்னுரிமை கொண்ட

அதன்படி தற்காலிகமாக ஆர்டர்களை எடுப்பதை நிறுத்தி,குறைந்த முன்னுரிமை கொண்ட தாயரிப்புகளுக்கான ஏற்றுமதிகளை முடக்கும் என்றும் அமேசான் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அமேசான் இந்தியா

மேலும் குறைந்த முன்னுரிமை தயாரிப்புகளுக்கான ஆர்டர்களை ஏற்கனலே வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அந்த ஆர்டர்களை ரத்துசெய்து அதற்கான பணத்தைத் திரும்ப பெற அவர்களுக்கு ஒரு தேர்வு வழங்கப்படும் என்றும், அமேசானின் இந்த புதிய புதுப்பிப்புகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. நிலைமை தெளிவானதும்,அமேசான் இந்தியா இயல்பான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள்

குறிப்பாக இதுதொடர்பாக அனைத்து மைய மற்றும் மாநில அரசாங்க வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றுவோம்,வாடிக்கையாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் விரிவாக்கப்பட்ட தேர்வை வழங்க எங்களுக்கு உதவும் நிலத்தடி ஆதரவை உறுதிப்படுத்த நாங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம்" என்றும் அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Understands The Situation And Selling Only Essential Items Only : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X