மலிவு விலையில் இணைய வசதி அறிமுகம் செய்ய அமேசான் திட்டம்.!
அமேசான் நிறுவனம் விரைவில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.
அமேசான் நிறுவனம் விரைவில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, அதன்படி தற்சமயம் அந்நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த சேவைக்கு வேண்டி பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது அமேசான் நிறுவனம். இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் வழங்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் நிறுவனம் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்பு 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் மக்களுக்கு இணைய வசதியை சிறப்பாக வழங்க முடியும் என அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் நிறுவனம் அன்மையில் வெளியிட்டது, பின்பு அனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமேசான் நிறுவனம் குறைந்த விலையில் இணைய சேவையை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications