ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: அமேசான் அதிரடி.!

|

அமேசான் வலைதளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக அனைத்துப் பொருட்களும் இந்த தளங்களில் எளிமையாக கிடைப்பதால் பொதுமக்கள் இதை அதிகளவு பயன்படுத்துகின்றனர். மேலும் அமேசான் நிறுவனம்
சரியான நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்கிறது.

 200 பில்லியன் டாலர் சொத்து

மேலும் 200பில்லியன் டாலர் சொத்து சேர்த்து உலகின் முதல் நபராக மாறியுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவர்கள்.
அதன்படி 56 வயதான அவர் தற்போது 205 பில்லயன் டாலர் மதிப்புடையவர். குறிப்பாக உலகின் இரண்டாவது பணக்காரரான பில் கேட்ஸை விட கிட்டத்தட்ட 89பில்லியன் டாலர் அதிகம் ஆகும்.

பில்கேட்ஸின் சொத்து மதிப்பு

தற்போது பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 116.2பில்லியன் டாலர் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது, பெசோஸின் நிகர மதிப்பு
ஜனவரி 1-ம் தேதி சுமார் 115பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் நதியை கடப்பதை படம் பிடித்த சீக்ரெட் டிரோன்!நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் நதியை கடப்பதை படம் பிடித்த சீக்ரெட் டிரோன்!

தொற்று அதிகரித்து வரும்

குறிப்பாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பலர் வீட்டை விட்டு வெளியே செல்ல அஞ்சுகின்றனர். எலக்ட்ரானிக்ஸ் முதல் பலசரக்கு வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர்.

ஆன்லைன் விற்பனை

தற்போது இதன் காரணமாக ஆன்லைன் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இ-காமர்ஸ் நிறுவனமானஅமேசான் 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தற்காலிக மற்றும் நிரந்தர பணிகளில் புதிய நியமனங்கள் செய்யப்படும் என்று அமேசான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய ஊழியர்கள் ஆர்டர்களை பேக்கிங் செய்தல்,டெலிவரி செய்தல் போன்ற வேலையில் அமர்த்தப்படுவார்கள். இந்த நியமனங்கள் விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் நியம்னங்கள் போல இது இருக்காது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

வெறும் ரூ.4-க்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு: ஏர்டெல் அதிரடி!வெறும் ரூ.4-க்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு: ஏர்டெல் அதிரடி!

நிறுவன வணிகம் சற்று

தற்போது ஆன்லைன் நிறுவன வணிகம் சற்று வேகமாக வளர்ந்து வருகிறது, ஆன்லைன் வர்த்தக நிறுவனம் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் சாதனை அளவாக வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர்.

ஆர்டர்களை நிறைவேற்ற

மேலும் ஆர்டர்களை நிறைவேற்ற இந்த ஆண்டு ஏற்கனவே 1,75,000பேரை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்திருந்தது. கடந்த வாரம் நிறுவனம் தன்னிடம் 33,000 கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப வேலைகள் காலியாக இருப்பதாக கூறியது. பின்பு இந்நிறுவனம் தற்சமயம் புதிதாக 100சேமிப்பு கிடங்குகள்,பேக்கேஜ்களை ஒழுங்குபடுத்தும் மையங்கள் மற்றும் பிற இடங்களில் வேலைக்கு ஆள் தேவை
என்று அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon to hire 100,000 more workers in its latest job spree this year: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X