சீனாவை விட்டு மூட்டை முடிச்சுடன் ஓடும் அமேசான்: துரத்தியடித்த அலிபாபா.!
ஆன்லைன் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றது அமேசான் நிறுவனம். இந்நிலையில் இந்நிறுவனம் சீனாவில் தனது ஆன்லைன் வணிக நிறுவன சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றது அமேசான் நிறுவனம்.

இந்நிலையில் இந்நிறுவனம் சீனாவில் தனது ஆன்லைன் வணிக நிறுவன சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்கு காரணம் அலிபாபா, ஜேடி காம் செய்த வேலைகள் தான்.

நெ.1 அமேசான்:
உலகளவில் வணிக ரீதியிலும் நெ.1 இடத்தில் இருக்கின்றது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் உயர்வாகவே இருக்கின்றது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் தொழில் செழிப்போடு இருகின்றது.

ஆன்லைன் பொருட்கள்:
ஆன்லைனில் ஆடை, சூ, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் அமேசானில் ஆடர் செய்தால் வீட்டிற்கே வரும். இதில் நாம் கேஷ் ஆன் டெலிவரியாகவும், கிரெடிட், டெபிகார்ட் பேமண்ட் செய்து பொருட்களை பெறலாம்.

சீனாவில் சேவை நிறுத்தம்:
சீனாவில் உள்நாட்டு தொழில் போட்டி காரணமாக தனது ஆன்லைன் வணிக சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

அலிபாபா, ஜேடிகாம் போட்டி:
அமேசான் நிறுவனத்துக்கு போட்டியாக சீனாவில் அலிபாபா, ஜேடிகாம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் போட்டியாக உருவாகி வருகின்றது.

15 ஆண்டாக சேவை:
சீனாவில் அமேசான் நிறுவனம் கடந்த 15 ஆண்டாக தொழில் செய்து வருகின்றது என்பது குறிப்பிட தக்கது.

ஜூன் 18ம் தேதியோடு நிறுத்தம்:
அமேசான் நிறுவனம் கடும் தொழில் போட்டிகாரணமாக ஜூன் மாதம் 18ம் தேதியோடு நிறுத்திக்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒரு சில சேவை மட்டும்:
அன்று முதல் சீனாவில் உள்ளவர்கள் வெளிநாட்டில் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே அமேசான் மூலம் வாங்க முடியும். மேலும் அமேசானின் வெப் சேவைகள், கிண்டில் இ-புத்தகங்கள் மற்றும் கிராஸ்-பார்டர் (cross-border) செயல்பாடுகளை சீனாவில் தொடரவும் அமேசான் முடிவு செய்துள்ளது


Click it and Unblock the Notifications